அதிசாரமாக இடப்பெயரவுள்ள குரு! விபரீத ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார்?

horoscope hinduism spiritual
By Kishanthini Mar 26, 2022 04:31 AM GMT
Report
Courtesy: oneindia

குருபகவான் இன்னும் சில நாட்களில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.

இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் ஏற்படப்போகிறது . அவர்கள் யார் யார் என பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்கு 9,12க்குடைய குரு 12ல் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இந்த குரு பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தர இருக்கிறது. 12க்கு உடையவன் 12ஆம் வீட்டில் அமரப்போவது விபரீத ராஜயோகத்தைத் தரப்போகிறது.

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு யோகம் அதிகம்.ஆரம்ப காலமும் முடிவு காலமும் சோதனையாக இருந்தாலும் இடைபட்ட காலங்களில் வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும்.வெளி மாநிலம் அல்லது வெளிநாடு வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு 8,11க்குடைய குரு லாப வீடான 11ல் வரப்போகிறார். கடந்த வருடத்தில் வேலை தொழில் ரீதியாக சிரமமான சூழ்நிலைகளை சந்தித்தவருக்கு இந்த வருடம் சாதகமான முடிவுகள் வர இருக்கிறது. நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும்.

தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் விரையச் செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் முற்பகுதியிலும் இறுதியிலும் திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்

மிதுனம் மிதுன ராசிக்கு 7,10ஆம் வீட்டிற்குரிய குரு பகவான் உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். சிலருக்கு சொந்தத் தொழிலில் சில சங்கடங்கள் வந்து சேரும்.

வேலை ரீதியான பிரச்சினைகள் நிகழும். செய் தொழிலை விட்டு வேறு தொழில் அல்லது வேலையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. வியாழக்கிழமை குருபகவான் ஆலயங்களுக்கு சென்று வணங்குவதன் மூலம் ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம்.

கடகம்

கடக ராசியில் பிறந்த உங்களுக்கு குரு பகவான் 8ஆம் இடத்திருந்து 9ஆம் இடத்திற்கு செல்லப் போகிறார். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும்.

குரு 6,9க்குடையர். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவார்கள். ஏற்ற காலகட்டம் இது. 6ஆம் இடம் என்பது ருண ரோக சத்ரு ஸ்தானத்தையும் 9ஆம் இடம் என்பது நீண்ட தூர பயணத்தையும் குறிக்கும்.

பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சட்டம்,ஜோதிடம்,ஆன்மீகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல தனச்சேர்க்கை உண்டாகும்.குரு பெயர்ச்சியின் இறுதி காலகட்டங்களில் அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு 5மற்றும் 8க்குடையவர் குரு 8ல் ஆட்சி பெற்று அமரப்போகிறார். அஷ்டம குரு என்று பயப்படுத்துவார்கள்.பயப்பட வேண்டாம். உங்களுக்கு அஷ்டம குரு நன்மையே செய்வார். ஆட்சி பெற்றும் அமரும் குரு என்பதால் விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது.

தொழில் வேலை விசயங்களில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து நன்மைகள் ஏற்படும். புது வித முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். இந்த ஆண்டு முழுவதும் உங்கள் நிலைமை சிறப்பாகவே இருக்கும்.

கன்னி

உங்கள் குரு பகவான் 4 மற்றும் 7ஆம் வீட்டிற்குடையர். அவர் 7ஆம் வீட்டில் அமர்கிறார்.கேந்திர ஆதிபத்ய தோஷத்தைப் பெறுகிறார் என்றாலும் ஆட்சி பெற்று அமரப்போகும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பது நன்மை.

திருமண சுபகாரியங்கள் கை கூடி வரும். வேலை விசயத்தில் கொஞ்சம் நிதானமாக செயல்படுவது நல்லது. புது தொழில் முயற்சிகளை தவிர்க்கவும். குடும்பத்தில் அசாத்திய சூழ்நிலைகள் நிலவும். விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்லவும். கணவன் மனைவியுடன் சில பிரச்சினைகள் வரலாம் மிகவும் கவனம் தேவை. குரு இடைபட்ட காலங்களில் ஓரளவு நன்மையைத் தருவார்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு குரு 6 மற்றும் மூன்றாம் வீட்டிற்கு உடையவர். ஆறுக்குடைய குரு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும்.

கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும். சில நேரங்களில் கடன்,நோய் சம்பந்தப்பட்ட வகையில் மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் நிகழும். பிற்பகுதியில் புது முதலீடுகள் கூடாது. பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம் யாரை நம்பியும் பணம் கடனாகத் தர வேண்டாம். திடீர் சொத்து சேர்க்கை ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு யோகமான காலம் என்றே சொல்லலாம். காரணம் 5,2க்குடைய குரு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய வீட்டிற்கு வரப் போகிறார். முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும்.

எந்த புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் தான் நம்பர் 1. பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும். குருவின் பார்வையும் உங்கள் ராசிக்குக் கிடைப்பதால் அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நல்ல தன வரவும் மன நிம்மதியும் கிடைக்கும்.

தனுசு

உங்கள் ராசி அதிபதியும் 4ஆம் வீட்டு அதிபதியுமான குரு சுக ஸ்தானமான 4ஆம் வீட்டில் அமரப் போகிறார். கடுமையான கேந்திர ஆதிபத்ய தோஷம். எனினும் உங்கள் ராசி அதிபதி உங்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார். அம்மாவிற்கு ஆரோக்கிய பிரச்சினை வரலாம். குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படும்.

வீடு அல்லது வேலை ரீதியான இடங்களில் இட மாற்றம் நிகழும். இந்த குரு பெயர்ச்சி மனைவி அல்லது தாய்க்கு பிரச்சினைகளைக் கொடுக்கும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மகரம் மகரம் ராசிக்கு 3,மற்றும் 12ஆம் வீட்டிற்குடைய குரு பகவான் 3ஆம் இடத்தில் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். கடந்த ஆண்டுகளில் குருப்பெயர்ச்சியின் பிற்பகுதியில் வாக்கு காப்பாற்றத் தவறுதல்,வம்பு, வழக்கு பிரச்சினைகளை சந்தித்த நீங்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும்.

பண வரவு அதிகரிக்கும். கடன் கட்டுக்கள் இருக்கும் அல்லது உதவி புரிவதற்கு ஆட்கள் வருவார்கள். தங்களின் எண்ணங்கள் நிறைவேறும். சகோதர வகையில் சந்தோஷம் அதிகரிக்கும் கவனம் தேவை.

கும்பம்

கும்ப ராசிக்கு 2 மற்றும் 11ஆம் வீட்டிக்குடைய குரு பகவான் 2ஆம் வீட்டிற்கு வரப் போகிறார். பேச்சிற்கு மதிப்பு கூடும். வாக்கில் கவனம் தேவை வம்பு, வழக்கு ,நீதிமன்ற வழக்குகள் தங்களுக்கு சாதகமாக வரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும், மனதில் நினைத்த தன விசயங்கள் தங்களுக்கு சாதகமாக முடியும். குரு பெயர்ச்சியின் இறுதியில் தொழில் ரீதியான முன்னேற்றம் நிகழும். யாருக்கும் ஜாமீன் போடாதீர்கள். சொந்தத் தொழில் ஆதாயம் பெருகும்.

மீனம்

குருபகவான் உங்கள் ராசிநாதன். தொழில் ஸ்தான அதிபதியும் அவரேதான். உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவது சோதனை மிகுந்த காலம். ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது.

குரு பெயர்ச்சியின் முக்கால் பகுதி வரை கடன் வேலை சார்ந்த விசயங்களில் பிரச்சினை இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து பேதங்கள் வரும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. சொந்த முதலீடுகள் வேண்டாம்.

குரு பெயர்ச்சியின் இறுதியில் தொழில் வேலை ரீதியான முயற்சிகளுக்கு அனுகூலம் உண்டு. வியாழக்கிழமை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US