LPL 2024: இன்றைய ஆட்டத்தில் கண்டி - தம்புள்ளை அணிகள் பலப்பரீட்சை
LPL தொடரின் இன்றைய ஆட்டத்தில் தம்புள்ளை மற்றும் கண்டி அணிகள் பலபரீட்ச்சை நடத்துகின்றன.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில், நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடும் கண்டி அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தினேஷ் சந்திமால் மற்றும் ஹன்று ப்ளட்சர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
தம்புள்ளை அணி
தம்புள்ளை அணி சார்பில் இன்றைய போட்டியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ், குசல் பெரேரா, மார்க் சப்மன், இப்ராஹிம் சத்ரன், லஹிரு உதான, மொஹமட் நபி, துஷான் ஹேமந்த, சாமிக்க விக்கிரமசிங்க, அகில தனஞ்சய, நுவனிது பெர்னாண்டோ, நுவான் துஷார, நுவன் பிரதீப் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
மேலும் கண்டி ஃபால்கன்ஸ் அணி சார்பில் தினேஷ் சந்திமால், ஆண்ட்ரே பிளெட்சர், மொஹமட் ஹரீஸ், கமிந்து மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், வனிந்து ஹசரங்க, தசுன் ஷனக, ரமேஷ் மெண்டிஸ், கவிந்து பத்திரத்ன, ஷோரிபுல் இஸ்லாம், கசுன் ராஜித ஆகியோர் விளையாடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |