சஷ்டி விரதம்! முருகனை வணங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்பானது சஷ்டி விரதம்.
ஆறுமுகனுக்கு ஆறாவது திதியில், ஐப்பசியில் எடுக்கும் இந்த விழாவில் நாம் கலந்து கொண்டாலோ அல்லது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டாலோ நம் கஷ்டங்கள் நீங்கி விடும்.
சஷ்டி விரதம் கடைபிடிப்பது எப்படி?
சஷ்டி விரதம் இருப்பவர்கள் முருகனின் ஆலயத்தில் தங்கி இருந்து அருகிலுள்ள நீர் நிலைகள், ஆறு மற்றும் கடலில் தினமும் நீராடி விரதத்தை மேற்கொள்வார்கள்.
கடலில் நீராடிய பின்னர் அங்குள்ள நாளி கிணற்றிலும் குளித்து முருகப்பெருமானை தரிசித்து விரதத்தை தொடங்க வேண்டும்.
சஷ்டி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்
குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கையை என 16 சம்பத்துகளையும் வேண்டி இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.
நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால், அனைத்து வகை செல்வங்களையும் அருளுவார் என்பது நம்பிக்கை.
என்ன செய்ய வேண்டும்?
விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது.
கந்த சஷ்டி கவசம் படித்தல், திருப்புகழ் படித்தல் மற்றும் இயலாதவர்களுக்கும் முதியோர்களுக்கும் உதவி செய்திடல் உள்ளிட்டவையால் முருகனின் அருளைப் பெறலாம்.