பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முக்கிய முடிவை பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம்
உலக அளவில் மிகப்பெரிய அரசியல் அறிவிப்பாக, பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மரின் இது தொடர்பான அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை மதியம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இந்த முடிவானது பல மாத விவாதங்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு பிறகு எடுக்கப்பட்டுள்ளது.
காசா போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுடன் சுமுகமாக வாழ்வது போன்ற சில நிபந்தனைகள் ஒப்பு கொள்ளப்பட்டால் மட்டுமே பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரம் வழங்கப்படும் என்று ஜூலை மாதம் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்து இருந்தார்.
இஸ்ரேல் கடும் எதிர்ப்பு
2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து வரும் போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பிரித்தானியாவின் இந்த முன்னெடுப்புக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது என்பது பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்குவது ஆகும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக சாடியுள்ளார்.
இதற்கிடையில் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் அறிவிப்புக்கு கண்டனமும் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |