கனடா பிரதமருக்கு எதிராக வெடித்தது போராட்டம் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
இந்தியாவுக்கு எதிரான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுக்கு எதிராக புதுடில்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவை வீழ்த்துவதற்காக சீனா போருக்கு தயாராகி வருவதாக குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான போட்டியில் உள்ள நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அந்நாட்டு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமிப்பிற்கான முயற்சியை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. தற்போது போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நைஜருடனான அனைத்து இராணுவ ஒத்துழைப்பையும் நிறுத்தப்போவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |