ஒன்றரை வயது குழந்தை மீது மோதிய பள்ளி வாகனம்: மைசூருவில் சோகம்
Toddler Run over by School Bus in Mysore: கர்நாடகாவில் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை மீது மோதிய பள்ளி வாகனம்
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் சாஸ்திரி பப்ளிக் பள்ளிக்கு சொந்தமான வாகனம் ஒன்று 4 வயது சிறுவனை பள்ளி முடிந்து வீட்டில் இறக்கி விடச் சென்றுள்ளது.
4 வயது சிறுவனை அவரது தாய் வாகனத்தில் இருந்து இறக்கி கொண்டிருந்த போது பள்ளி வாகனம் எதிர்பாராத விதமாக முன்னோக்கி நகர்ந்தது.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 1 ஆண்டு 7 மாதங்கள் வயது கொண்ட பெண் குழந்தை மீது வாகனம் மோதியது.

மேலும் பள்ளி வாகனத்தின் சக்கரம் குழந்தையின் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து 42 வயது ஓட்டுநர் சித்தராஜு மீது காவல்துறையில் குழந்தையின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.