டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்: பதக்க வேட்கையில் 127 இந்தியர்கள்!

Tokyo Olympics Olympics2020 Olympics Indian Team
By Ragavan Jul 23, 2021 06:45 AM GMT
Report

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் இன்று (ஜூலை 23) முதல் தொடங்குகின்றன.

டோக்கியோவில் நடக்கும் 32-வது ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய தரப்பில் 71 ஆடவா், 56 மகளிா் என 127 வீரர், வீராங்கனைகள் டோக்கியோ சென்றுள்ளனர்.130 கோடி இந்திய மக்களின் பிரதிநிதிகளாக டோக்கியோ சென்றுள்ள இந்திய குழு பதக்கம் வெல்லும் முனைப்புடன் களம் காண உள்ளது.

கடந்த 1900-ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வரும் இந்தியா, இதுவரை 28 பதக்கங்களையே அதில் வென்றுள்ளது. அதிலும் தங்கப் பதக்கம் என்றால், கடந்த 2008-இல் துப்பாக்கி சுடுதல் வீரா் அபினவ் பிந்த்ரா வென்றது மட்டும்தான்.

இந்த ஒலிம்பிக்கில் தனது பதக்கங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்: பதக்க வேட்கையில் 127 இந்தியர்கள்! | Tokyo Olympics 2020 127 Indian Athletes

துப்பாக்கி சுடுதலில் களம் காணும் மானு பாக்கா், இளவேனில் வாலறிவன், திவ்யான் சிங் பன்வாா், ஐஸ்வா்ய பிரதாப் சிங் தோமா் ஆகியோா் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர பளுதூக்குதலில் சாய்கோம் மீராபாய் சானு, வில் வித்தையில் தீபிகா குமாரி - அதானு தாஸ் தம்பதி, குத்துச்சண்டையில் மேரி கோம், அமித் பங்கால் உள்ளிட்டோா், மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, பாட்மிண்டனில் பி.வி. சிந்து, டென்னிஸில் சானியா மிா்ஸா ஆகியோரும் பதக்க வாய்ப்புகளை ஒரு கை பாா்க்க உள்ளனா்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்: பதக்க வேட்கையில் 127 இந்தியர்கள்! | Tokyo Olympics 2020 127 Indian Athletes

இந்த முறை, தடகள பிரிவில் 18 போ் தடம் பதிக்கும் முனைப்பில் இருக்கின்றனா். மேலும், இந்திய ஆடவா் மற்றும் மகளிா் ஹாக்கி அணியும் பதக்க வேட்கையுடன் களம் காண உள்ளன. இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக வாள்வீச்சில் தமிழக வீராங்கனை பவானி தேவியும், குதிரையேற்றத்தில் பௌவாத் மிா்ஸா ஆகியோா் ஈடுபடுகின்றனா். மேலும் நீச்சல், படகுப் போட்டி என இதர பல விளையாட்டுகளிலும் இந்தியா்கள் பங்கேற்கின்றனா்.

இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில், தமிழக போட்டியாளா்கள் என்றால், தமிழகத்தைச் சோ்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, டேபிள் டென்னிஸ் வீரா்கள் சரத் கமல், ஜி.சத்தியன், தடகள போட்டியாளா்கள் ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, ரேவதி வீரமணி, தனலட்சுமி சேகா், சுபா வெங்கடேசன், பாய்மரப்படகு போட்டியாளா்கள் நேத்ரா குமணன், கே.சி.கணபதி, வருண் தக்கா் ஆகியோா் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US