டாம் அபேல் 307 ஓட்டங்கள் விளாசல்: 731 ஓட்டங்கள் குவித்தும் டிராவில் முடிந்த போட்டி
Somerset and surrey test match end drawn: சோமர்செட், சர்ரே அணிகளுக்கு இடையிலான கவுண்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
டௌடனில் நடந்த சர்ரே மற்றும் சோமர்செட் அணிகளுக்கு இடையிலான கவுண்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
டாம் அபேல் 307
சோமர்செட், சர்ரே அணிகளுக்கு இடையிலான கவுண்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி டௌடனில் நடந்தது.
சர்ரே அணி முதல் இன்னிங்ஸில் 422 ஓட்டங்கள் குவித்தது. டேன் லாரன்ஸ் 139 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய சோமர்செட் அணியில் டாம் அபேல் 8 சிக்ஸர்கள், 31 பவுண்டரிகளுடன் 307 (407) ஓட்டங்கள் விளாசினார்.
சோமர்செட் 731
டாம் லம்மோன்பி 229 ஓட்டங்களும், மைக்கேல் பிரிட்டோரியஸ் 84 ஓட்டங்களும் விளாசினர். இதன்மூலம் சோமர்செட் 731 ஓட்டங்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய சர்ரே அணி, கடைசி நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் எடுக்க போட்டி டிராவில் முடிந்தது.
சோமர்செட் அணிக்காக முச்சதம் விளாசிய 8வது என்ற சாதனைப் பட்டியலில் டாம் அபேல் இணைந்தார்.
