அவுஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து வீரர்: இமாலய இலக்கு நிர்ணயம்
England 355-6 vs australia in 2nd odi: அவுஸ்திரேலிய அணிக்கு 356 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது.
அடிலெய்டில் நடந்து வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாம் பான்டன் 121 ஓட்டங்கள் விளாச இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 355 ஓட்டங்கள் குவித்தது.
டாம் பான்டன்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 355 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய டாம் பான்டன் (Tom Banton) 99 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 121 ஓட்டங்கள் விளாசினார்.

ஜோர்டன் காக்ஸ் 67 (49) ஓட்டங்களும், ஜோ ரூட் 62 (68) ஓட்டங்களும், வில் ஜேக்ஸ் 54 (40) ஓட்டங்களும் விளாசினர். சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

