இலங்கை அணிக்கு 356 ஓட்டங்கள் இலக்கு: அபார சதம் விளாசிய தொடக்க வீரர்
Tom banton 126 runs vs sri lanka: இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 355 ஓட்டங்கள் குவித்துள்ளது.
லண்டனில் நடந்து வரும் 3வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 355 ஓட்டங்கள் குவித்துள்ளது.
டாம் பான்டன் வாணவேடிக்கை
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழக்க, ஜோ ரூட் 18 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து அணித்தலைவர் ஹாரி புரூக் அதிரடி ஆட்டத்தில் மிரட்ட, தொடக்க வீரர் டாம் பான்டன் வாணவேடிக்கை காட்டினார்.
ஹாரி புரூக்
இந்தக் கூட்டணியின் மூலம் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர, ஹாரி புரூக் (Harry Brook) 66 பந்துகளில் 77 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஜோர்டன் காக்ஸும் இலங்கை பந்துவீச்சை நொறுக்கினார். சதம் விளாசிய டாம் பான்டன் (Tom Banton) 126 (105) ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.
காக்ஸ் 52 பந்துகளில் 76 ஓட்டங்கள் விளாச இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 355 ஓட்டங்கள் குவித்தது. அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும், சசிந்து கொலொம்பேக் 2 விக்கெட்களும் கைப்பற்றினர்.
