விண்வெளியில் பறந்தபடி திருமணம் செய்ய உள்ள 63 வயது நடிகர்
விண்வெளியில் பறந்தபடி ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாம் குரூஸ்
63 வயதான பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் ஏற்கனேவே 3 திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்றவர்.

தற்போது நடிகை அனா டி அர்மாஸ் மற்றும் டாம் குரூஸ் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. தற்போது இருவரும் திருமணம் செய்யும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதேவேளையில், இந்த திருமணத்தை வழக்கமான திருமணமாக நடத்தாமல் வித்தியாசமான முறையில் நடந்த டாம் குரூஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விண்வெளியில் திருமணம்
விண்வெளி பயணத்தில் ஆர்வம் கொண்டவரான டாம் குரூஸ், விண்வெளியில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடியான ஆக்சன் காட்சிகள் மூலம் புகழ்பெற்ற டாம் குரூஸ், அதே பாணியில் விண்வெளியில்,ஸ்கை டைவிங்கின் போது திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி நடந்தால், விண்வெளியில் திருமணம் செய்த முதல் ஜோடி சென்ற பெருமையை பெறுவார்கள்.
37 வயதான நடிகை அனா டி அர்மாஸ்கும் ஏற்கனவே ஒரு திருமணம் நடைபெற்று, அது விவகாரத்தில் முடிவடைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |