நடிகர் டாம் க்ரூஸின் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார் திருட்டு!
மிஷன் இம்பாசிபிள்-7 படப்பிடிப்பின் போது ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் கார் திருடு போனது.
மிஷன் இம்பாசிபிள்-7 திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரித்தானியாவில் Birmingham நகரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் டாம் க்ரூஸ், தனது விலை உயர்ந்த BMW X7 காரில் வந்துள்ளார்.
அந்தக் காரை நட்சத்திர ஹோட்டலுக்கு வெளியே நிறுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது காருடன் சேர்த்து அதில் இருந்த லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது.
மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததால் காவல்துறையினர் அந்த வாகனத்தை மீட்டனர். கார் மீட்கப்பட்டாலும், காரில் இருந்த உடமைகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன. காரை திருடிச் சென்றவர் யார் என்பது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 ஒரு நான்கு கதவுகள் கொண்ட ஆடம்பர கார், இது ஒரு நேர்த்தியான வெளிப்புறத்தைக் கொண்டுள்ளது மற்றும் அதில் 4.4 லிட்டர் V8 எஞ்சின் உள்ளது.
இந்த எஞ்சின் 523 ஹெச்பி ஆற்றலை இயக்கும் திறன் கொண்டது. இது பூஜ்ஜியத்திலிருந்து 96 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 249 கிமீ ஆகும்.