மிஷன் இம்பாசிபிள் பட சண்டைக்காட்சி - கின்னஸ் சாதனை படைத்த டாம் குரூஸ்
மிஷன் இம்பாசிபிள் பட சண்டைக்காட்சி மூலம் டாம் குரூஸ் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
டாம் குரூஸ்
ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் 62 வயதான டாம் குரூஸ்.
இவரின் மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த படங்கள் வசூலில் பெரும் சாதனைகளை படைத்துள்ளது.
1996 ஆம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள் படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பையடுத்து, இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின.
கடந்த மே 23 ஆம் திகதி Mission: Impossible – The Final Reckoning என்ற பெயரில், மிஷன் இம்பாசிபிள் தொடரின் 8வது பாகம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.
கின்னஸ் சாதனை
இந்தபடத்தின் சண்டை காட்சி மூலம், டாம் குரூஸ் கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
Most burning parachute jumps by an individual - 16🪂🔥
— Guinness World Records (@GWR) June 5, 2025
Congratulations @TomCruise 👏 pic.twitter.com/AkHBtKFlrP
தென் ஆப்பிரிக்காவின் டிராகென்ஸ்பெர்க் நகரில், சுமார் 75,000 அடி உயரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று, அங்கிருந்து டாம் க்ரூஸ் எரியும் பாராசூட்டில் இருந்து குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.
Light the fuse. pic.twitter.com/X1i1w70VOX
— Tom Cruise (@TomCruise) June 5, 2025
இதற்காக, 16 முறை அவர் எரியும் பாராசூட்டிலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம், எரியும் பாராசூட்டிலிருந்து அதிக முறை குதித்த நபர் என்ற சாதனையை டாம் குரூஸ் படைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |