பாப் டூ பிளெஸ்ஸின் டாக்கர்ஸ் 93 ஓட்டங்களில் சுருண்டு படுதோல்வி: மிரட்டிய சான்ட்னர் படை
tom curran and santner smash rotterddam dockers by bowl: ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோட்டர்டம் டாக்கர்ஸை வீழ்த்தியது.
ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் 148
எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் மற்றும் ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய டி20 போட்டி வூர்பர்க்கில் நடந்தது.
Caught a literal Bullet in his hands 💥
— European T20 Premier League (ETPL) (@etplofficial) September 5, 2026
What a catch to dismiss the Rotterdam Skipper ⚡🔥#ETPL pic.twitter.com/ksNBXJB49W
முதலில் ஆடிய எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பிரண்டன் மெக்முல்லன் 37 ஓட்டங்களும், லௌரி எவன்ஸ் 33 ஓட்டங்களும், டெலனி 31 ஓட்டங்களும் எடுத்தனர்.
மிரட்டலாக பந்துவீசிய ஜெய் மூன்ரா, டேவிட் விஸே மற்றும் அன்ரிச் நோர்ஜே தலா 3 விக்கெட்டுகளும், ரோலோப் வான் டெர் மெர்வ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணி 18 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு சுருண்டது. அணிதலைவர் பாப் டூ பிளெஸ்ஸிஸ் 21 ஓட்டங்களும், பென் மனேண்டி 16 ஓட்டங்களும் எடுத்தனர்.
A bullet, but Watt caught it 💪🤩#ETPL pic.twitter.com/PvekX8JUsq
— European T20 Premier League (ETPL) (@etplofficial) September 5, 2026
டாம் கர்ரன் (Tom Curran) 3 விக்கெட்டுகளும், மிட்செல் சான்ட்னர், மார்க் வாட் தலா 2 விக்கெட்டுகளும், போல்ட் மற்றும் ஸ்மட்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
The Edinburgh Castle Rockers put on a bowling masterclass to hand Rotterdam Dockers their first loss of #ETPL 👊✨#ETPL pic.twitter.com/6TrKf2ZBn2
— European T20 Premier League (ETPL) (@etplofficial) September 5, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |