28 வயதில் ஹாலிவுட்டை கலக்கும் பிரித்தானியர்! மிரள வைக்கும் ஊதியம் மற்றும் சொத்துமதிப்பு
ஸ்பைடர்மேன் புகழ் நடிகர் டாம் ஹாலண்டின் சொத்து மதிப்பு மற்றும் ஊதியம் குறித்து இங்கே காண்போம்.
டாம் ஹாலண்ட்
இங்கிலாந்தின் லண்டன் நகரில் 1996ஆம் ஆண்டு பிறந்தவர் டாம் ஹாலண்ட் (Tom Holland). விம்பிள்டனில் படிப்பை முடித்த இவர், தனது தந்தையை முன்மாதிரியாக கருதினார். மேலும் அவர் டாமின் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மேலாளராக பணியாற்றினார்.
நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த டாம், 2010யில் வெளியான Arrietty எனும் அனிமேஷன் படத்திற்கு டப்பிங் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து The Impossible (2012) படத்தில் முதலில் நடித்தார். பின்னர் சில படங்களில் நடித்தாலும், 2015யில் வெளியான 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்' படத்தில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரல் தோன்றி ஆச்சரியப்பட வைத்தார்.
பீட்டர் பார்க்கர் ஆகவும், ஸ்பைடர்மேனாகவும் ரசிகர்கள் டாம் ஹாலண்டை ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து "Spider-Man: Homecoming ", "Avengers: Infinity War", "Avengers: Endgame", "Spider-Man: Far From Home" மற்றும் "Spider-Man: No Way Home" படங்களில் முத்திரை பதித்துள்ளார்.
ஊதியம் மற்றும் சொத்துமதிப்பு
Avengers: Endgame படத்தில் தோன்றியதற்காக மட்டும் 3 மில்லியன் டொலர்கள் ஊதியமாக பெற்றார் டாம்.
ஆனால் அவரது ஒவ்வொரு படத்திற்கும் 4 முதல் 5 மில்லியன் டொலர்கள் ஊதியம் பெறுகிறார்.
28 வயதில் ஹாலிவுட்ட உச்ச நடிகராக மாறியுள்ள டாம் ஹாலண்டின் சொத்து மதிப்பு 25 மில்லியன் டொலர்கள் என்று கூறப்படுகிறது.
டாம் 400,000 டொலர்கள் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ளார். இவருக்கு லண்டனில் 4 மில்லியன் டொலர்கள் மதிப்பில், 3 படுக்கையறைகள் கொண்ட flat உள்ளது.
எனினும் டாம் தனது காதலி ஸிண்டாயாவுடன் நியூயார்க் நகரில் நேரத்தை செலவிடுவதையே விரும்புகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |