145 ஓட்டங்கள் விளாசிய வீரர்! இந்திய அணியை மொத்தமாக காலி செய்த இருவர் கூட்டணி

Indian Cricket Team New Zealand Cricket Team Kane Williamson
By Sivaraj Nov 25, 2022 10:52 AM GMT
Report

ஆக்லாந்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

ஷ்ரேயாஸ் ஐயர் 80

ஈடன் பார்க் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் (72), சுப்மன் கில் (50) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (80) அரை சதம் விளாசினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சாம்சன் 36 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 37 ஓட்டங்களும் எடுத்தனர்.

கில்-தவான்/Gill-Dhawan

@PTI

இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ, பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஷ்ரேயாஸ் ஐயர்/Shreyas Iyar

7வது சதம்

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் 22 ஓட்டங்களும், டெவோன் கான்வே 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டேர்ல் மிட்செல் 11 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லாதம் இருவரும் கைகோர்த்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய லாதம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 7வது சதத்தை கடந்தார். மறுமுனையில் வில்லியம்சன் அரைசதம் கடந்தார்.

டாம் லாதம்/Tom Latham

@AFP/David Rowland

இந்திய அணி பந்துவீச்சாளர்களால் இந்த கூட்டணியை இறுதிவரை பிரிக்க முடியவில்லை. நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 309 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டாம் லாதம்-கேன் வில்லியம்சன்/Tom Latham-Kane Williamson

@AFP Photo

221 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்

டாம் லாதம் 104 பந்துகளில் 5 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 145 ஓட்டங்களும், வில்லியம்சன் 98 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்களும் எடுத்தனர். இந்த கூட்டணி 221 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.   

டாம் லாதம்-கேன் வில்லியம்சன்/Tom Latham-Kane Williamson

@Andrew Cornaga/Photosport via AP

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US