காலையில் சீக்கிரமாக தக்காளி தோசை செய்வது எப்படி?
பொதுவாகவே காலை உணவாக தோசை மற்றும் இட்லி இருந்தால் பலரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம்.
அதிலும் தோசையை விதமான சுவையில் சாப்பிடுவது என்றால் சிறியவர்களுக்கு அதிக ஆசை இருக்கும்.
அந்தவகையில் அனைவருக்கும் பிடித்த தக்காளி தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 3/4 கப்
- உளுத்தம் பருப்பு - 1/2 கப்
- மிளகாய் - 8
- தக்காளி - 3 நறுக்கியது
- பூண்டு - 2 பற்கள்
- கல் உப்பு - 1/2 தேக்கரண்டி
- தண்ணீர்
- நெய்
செய்முறை
1. மிக்ஸியில் ஊறவைத்த பச்சரிசி, மிளகாய், ஊறவைத்த உளுத்தம் பருப்பு, தக்காளி, பூண்டு, கல் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
2. பின்பு பாத்திரத்திற்கு மாற்றி 1 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
3. பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
4. தோசை கல்லை சூடு செய்து மாவை ஊற்றி தேய்க்கவும்.
5. சுற்றிலும் நெய் விட்டு ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான தக்காளி தோசை தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |