முகம் பளிச்சென்ற மாற இந்த ஒரே ஒரு பேஸ்பேக் போதும்.., எப்படி தயார்ப்பது?
Tomato face packs for instant glow- பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், முகம் பளிச்சென்ற மாற உதவும் பேஷ்பேக்கை, தக்காளி வைத்து எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
சருமத்திற்கு தக்காளி பல அற்புதமான நன்மைகளை வழங்குகிறது.
இதில் உள்ள வைட்டமின் சி, லைகோபீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
1. தேவையான பொருட்கள்
- தக்காளி- 1
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தக்காளி சாறை எடுத்து கொள்ள வேண்டும்.
பின் அதில் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து இதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவாகவும், பிரகாசமாகவும் மாறும்.
2. தேவையான பொருட்கள்
- தக்காளி- 1
- முல்தானி மெட்டி- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டியை எடுத்து அதில் 1 தக்காளி சாறை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |