விண்வெளியில் விளைந்த தக்காளி : பூமிக்கு கொண்டு வரும் நாசா!
தற்போது சில கிரகங்களில் ஆராய்ச்சி நடக்கப்பட்டு வருகின்றது.
அதிலும் கடந்த சில தினங்களாக செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றதா என்று ஆராய்ச்சி நடக்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும் விண்வெளியில் பயிர்ச்செய்கையை மேற்கொண்ட விஞ்ஞானிகள், முதலில் தக்காளியை பயிரிட்டுள்ளனர்.
தக்காளி பயிர்ச்செய்கை
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் நிலவில் காணப்படும் மண் மாதிரியை பரிசோதித்து நாசா மற்றும் புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செடியை வளர்த்தனர்.
Picture: Nasa
தக்காளி பெரும்பாலும் அனைவரும் தினமும் உணவில் சேர்க்ககூடிய ஒரு உணவு பொருளாகும்.
விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்ட மினியேச்சர் கிரீன்ஹவுஸ் ஆய்வுக் கூடம் ஒன்றில் விஞ்ஞானிகள் தக்காளியை பயிரிட்டுள்ளனர்.
இது சுமார் 100 நாட்களுக்கு மேல் பயிரிடப்பட்டு 90, 97 மற்றும் 104 வது நாட்களில் அறுவடை செய்யப்படுள்ளது.
அதை தற்போது பூமியில் விளையும் சாதாரண தக்காளியை போன்று உள்ளதா என்று பரிசோதனை செய்து வருகின்றனர் என்று நாசா தெரிவித்துள்ளது.
Picture: Nasa
Picture: Nasa
Picture: Nasa