தக்காளியில் உள்ள தீமைகள்! இவர்கள் மட்டும் உணவில் சேர்க்கவே கூடாது உஷார்
தக்காளியில் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளது தக்காளியில் உள்ள லைக்கோபின் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.
லைகோபீன் பல்வேறு புற்றுநோய் செல்கள் வளர்ச்சி மற்றும் பரவுவதை தடுக்க உதவுகிறது செரிமானம், செரிமான அமைப்பு மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தக்காளி உதவுகிறது.
இது போல பல நன்மைகள் இருந்தாலும், தக்காளியில் தீமைகளும் உள்ளன.
தக்காளி இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது. எனவே ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சலால் அவதிப் படுபவர்கள் தக்காளி மற்றும் தக்காளியில் செய்யப்பட்ட உணவு உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும்.
femina
தக்காளியை சாப்பிட்ட பிறகு வெகு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அறிகுறிகளில் வாய், காது அல்லது தொண்டை அரிப்பு அல்லது உதடுகள், வாய், நாக்கு மற்றும் தொண்டை வீக்கம் ஆகியவை அடங்கும்.
சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தக்காளியை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. மேலும் தக்காளியில் ஆக்சலேட் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது சிறுநீரக நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
Getty Images