குழந்தைகள் விரும்பி உண்ணும் தக்காளி சாஸ்.., வீட்டிலேயே எப்படி செய்வது?
தக்காளி சாஸ் என்பது தக்காளியை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையூட்டும் உணவுப் பொருள்.
இதனை சாமோசா, பிரெஞ்ச் ஃப்ரைஸ், பர்கர், சாண்ட்விச் போன்ற சில உணவுகளில் சுவை கூட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
அந்தவகையில், வீட்டிலேயே சுவையான தக்காளி சாஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தக்காளி- 1kg
- வெங்காயம்- 1 துண்டு
- பூண்டு- 2
- பட்டை- 1 துண்டு
- கிராம்பு- 2
- வினிகர்- ¼ கப்
- சர்க்கரை- ¼ கப்
- உப்பு- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் 20 நிமிடம் வேகவைத்துக்கொள்ளவும்.
பின் இதனை நன்கு ஆறவைத்து அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவை, வினிகர், சர்க்கரை, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்கவைக்கவும்.
இறுதியாக நன்கு கெட்டியாகி வந்ததும் அடுப்பை அனைத்து ஆறவைத்தால் சுவையான தக்காளி சாஸ் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |