நிமிடத்தில் தக்காளி குருமா செய்வது எப்படி?
தக்காளி இல்லாமல் எந்த சமையலும் கிடையாது. ஒரு உணவை செய்வது பலரும் தக்காளியை பயன்படுத்துவது வழக்கம். தக்காளி அவ்வளவு முக்கியமானது.
சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் இது வழிவகுக்கிறது. அந்தவகையில் தக்காளி வைத்து எப்படி சுவையான குருமா செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
- தேங்காய் - 1/2 கப் துருவியது
- பச்சை மிளகாய் - 2
- சோம்பு - 1 தேக்கரண்டி
- பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
- பட்டை - 1 சிறிய துண்டு
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 2
- தண்ணீர்
தக்காளி குருமா செய்ய
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- பிரியாணி இலை
- பட்டை
- கல்பாசி
- ஜாவித்ரி
- வெங்காயம் - 1 நறுக்கியது
- பூண்டு இடித்தது
- கறிவேப்பிலை
- தக்காளி - 6 நறுக்கியது
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- மல்லி தூள் - 2 1/2 தேக்கரண்டி
- உப்பு
- கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
மசாலா விழுது அரைக்க
1. மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.
தக்காளி குருமா செய்ய
2. ஒரு அகலமான கடாயில் எண்ணெய், சீரகம், பிரியாணி இலை, பட்டை, கல்பாசி, ஜாவித்ரி சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து இடித்த பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
5. பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
6. தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
7. அடுத்து அரைத்த மசாலா விழுதை சேர்த்து தண்ணீர், உப்பு தேவைப்பட்டால் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.
8. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து நன்கு கலந்து எடுத்தால் சுவையான தக்காளி குருமா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |