Wow... இன்று ஒரே நாளில் குறைந்த தக்காளி விலை: என்ன காரணம்ன்னு தெரியுமா?
இன்று தமிழகத்தில் தக்காளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.
தக்காளி விலை குறைந்தது
கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.
தக்காளி உற்பத்தி செய்த விவசாயிகள் ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக சம்பவங்களும், லட்சாதிபதியான சம்பவங்களும் நடந்தன.
அந்த அளவிற்கு தக்காளி விலை ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.
வட மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.230 முதல் ரூ.260 வரை விற்பனையானது.
தக்காளி விலை ஏற்றத்தால் இல்லத்தரசிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தற்போது தக்காளி சாகுபடி குறைந்திருக்கிறது.
ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளி விலையில் அதிரடி உயர்வு ஏற்பட்டது.
இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இன்று தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தக்காளி விலை ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |