கமகமக்கும் கல்யாண வீட்டு தக்காளி ரசம்.., எப்படி செய்வது?
மதிய வேளையில் உண்ணும் உணவுகள் ஜீரணம் ஆவதற்கு ரசம் பெரிதும் உதவுகின்றது.
ரசத்தில் பருப்பு ரசம், தக்காளி ரசம், லெமன் ரசம், மிளகு ரசம், எலும்பு ரசம் என்று ரசத்தில் பல வகைகள் உள்ளன.
அந்தவகையில், தற்போது சுவையான கல்யாண வீட்டு தக்காளி ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- தக்காளி- 2
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- பச்சைமிளகாய்- 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- ½ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 2
- பூண்டு- 5 பல்
- புளி- எலுமிச்சை அளவு
- நெய்- 1 ஸ்பூன்
- பெருங்காயம்- ¼ ஸ்பூன்
செய்முறை
முதலில் சீரகம் மற்றும் மிளகை வறுத்து ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.

இதற்கடுத்து வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, இடிச்ச பூண்டு மற்றும் அரைத்த கலவை சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதில் புளியை கரைத்து சேர்த்து நுரை பொங்கி வந்ததும் அடுப்பை அனைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு தாளிப்பு கடாயில் நெய் சேர்த்து பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால் தக்காளி ரசம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |