இந்த பிரச்சினை உள்ளவர்கள் தக்காளியை மறந்தும் கூட சாப்பிடாதீங்க! ஆபத்தை ஏற்படுத்துமாம்
பொதுவாக நமது அன்றாட சமையலில் சில முக்கியமான காய்கறிகள் இருக்கும். அப்படியான காய்கறிகளில் தக்காளியும் ஒன்றாகும்.
இதில் வைட்டமின் ஏ, சி அதிகமாக உள்ளது. இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.
மேலும் கூடுதலாக இதில் ஃபோலேட், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், குரோமியம், கோலின், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
எனவே தக்காளியை உட்கொள்வது மூலம் நாம் பல வகையான ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.
அதுமட்டுமின்றி இவை பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. இருப்பினும் தக்காளியை ஒரு சிலர் எடுத்து கொள்ள கூடாது. அந்தவகையில் அவர்கள் யார் என்பதை இங்கே பார்ப்போம்.
image - herzindagi
யார் எடுத்து கொள்ள கூடாது?
சிறுநீரகம் செயலிழந்தவர்கள்,டயாலிசிஸ் செய்து கொள்பவர்கள்,டயாலிசிஸ் செய்வதற்கு முந்தைய ஸ்டேஜில் உள்ளவர்கள், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் தக்காளியை எடுத்து கொள்ள கூடாது.
என்ன ஆபத்தை ஏற்படுத்தும்?
கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் கிட்னி செயலிழந்து விட்டதால் பொட்டாசியம் வெளியேறாமல் உடலில் அதிகமாக தங்கி விடும். அது ரத்தத்தில் தொடர்ந்து இருப்பதால் உடலில் நச்சுக்களை உருவாக்கி இதய ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.
எனவே, பொட்டாசியம் நிறைந்த தக்காளியை அவர்கள் முழுமையாக தவிர்த்து விட வேண்டும். சிலருக்கு மட்டும் அவர்களின் உடல் நிலையை பொறுத்து குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தலாம்.
யாருக்கு நல்லது?
- அடிக்கடி சருமம் மங்கிப்போவது, சருமத்தில் புண் வருவது, புண் வந்தும் ஆறாமல் இருப்பது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியை அதிகமாக எடுத்து கொள்ளலாம்.
- வைட்டமின் A குறைபாடு உள்ளவர்கள் , கண்பார்வை பிரச்சனைகள் உள்ளவர்கள் எடுத்து கொள்ளலாம்.
- இதய சிகிச்சையில் ஏற்கனவே இருப்பவர்கள், பைப்பாஸ் செய்தவர்களுக்கு இது நல்ல பலனை தரும்
- . பலவிதமான புற்றுநோய் ஏற்படும் அபாயங்களை குறைக்கவும் தக்காளி பயன்படுகிறது.
நன்மைகள்
- தக்காளியில் இருக்க கூடிய வைட்டமின் C நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.
- பற்கள், ஈறுகள், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
- தக்காளியில் இருக்க கூடிய ஆன்டிஆக்ஸிடண்டுகள் நமது செல்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வதால் உறுப்புகளில் ஏற்பட கூடிய பாதிப்புகளின் அபாயத்தை குறைக்கிறது
- . இதய நோயாளிகளுக்கு தக்காளி மிக நல்லது. ரத்த குழாய்களின் திறனை மேம்படுத்தி ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீராக்குகிறது.
எவ்வளவு தக்காளி சாப்பிடலாம்?
சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 300 முதல் 400 கிராம் காய்கறிகளை சாப்பிடலாம். அதில் தக்காளியை 100 கிராம் வரை சேர்த்து கொள்ளலாம். இது இரண்டு தக்காளிகளுக்கு சமம் எ