பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ்... ஹீத்ரோ விமான நிலையத்தில் கைதான பிரபலம்
தீவிர வலதுசாரி ஆர்வலரான டாமி ராபின்சன் சனிக்கிழமையன்று ஹீத்ரோ விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துச் சுதந்திரத்தின் மீதான
ஸ்டீபன் யாக்ஸ்லி-லென்னன் என்ற இயற்பெயர் கொண்ட அந்தத் தீவிர வலதுசாரி ஆர்வலர், 2019 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு எல்லைப் பாதுகாப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு, அவரது அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறி ராபின்சன் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அத்துடன், தனது சட்டரீதியான போராட்டத்திற்கான செலவுகளை ஈடுகட்ட நிதி வழங்குமாறு தனது ஆதரவாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ராபின்சனின் செய்தித் தொடர்பாளர், அவர் யாருடன் பேசுகிறார் என்பதைப் பார்க்கவும், ஒரு தலைமுறை பிரித்தானிய சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதில் அரசியல்வாதிகளுக்கு உள்ள பங்கை வெளிப்படுத்தக்கூடிய அவரது தகவல் மூலங்கள் யார் என்பதைக் கண்டறியவும் அவர்கள் விரும்பக்கூடும் என பதிவிட்டுள்ளார்.
மேலும், இது கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல், இது புலனாய்வு இதழியலின் மீதான தாக்குதல், இதைத் தவிர வேறொன்றுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள்
2019 ஆம் ஆண்டின் சட்டமானது, விரோதச் செயல்களைத் திட்டமிடவும், உருவாக்கவும் மற்றும் செயல்படுத்தவும் பயணம் செய்வதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைத் துறைமுகங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்குத் தடுத்து நிறுத்தவும், விசாரிக்கவும், சோதனையிடவும் மற்றும் காவலில் வைக்கவும் அதிகாரம் அளிக்கிறது.

சவுத்தாம்ப்டனில் காவல்துறை காவலில் இருந்தபோது 18 வயதான ஹென்றி நோவாக் மரணமடைந்ததை காட்டும் காவல்துறையினரின் உடல் கமெரா காணொளிப் பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாக, பிரித்தானியா முழுவதும் நிலவும் இனப் பதட்டங்களுக்கு மத்தியில் ராபின்சன் ஊடக வெளிச்சம் பெற்றுள்ளார்.
ராபின்சன் முன்னெடுத்த போரட்டம் கலவரத்தில் முடிந்ததில், 13 பொலிசாரும் ஒரு காவல்துறை நாயும் காயங்கலுடன் தப்பியிருந்தனர். பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்த விவரங்களை ராபின்சன் X தளத்தில் பதிவிட்டு வந்தார். இதை இன்னொரு தீவிர வலதுசாரி ஆதரவாளரான எலோன் மஸ்க் ஆதரித்திருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |