ஜேர்மனியின் மூத்த வீரர் திடீர் ஓய்வு! உருக்கமான பதிவால் Real Madrid ரசிகர்கள் அதிர்ச்சி
யூரோ 2024 தொடருக்கு பின் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜேர்மனி வீரர் டோனி க்ரூஸ் அறிவித்துள்ளார்.
டோனி க்ரூஸ்
14 ஆண்டுகளாக ஜேர்மனி கால்பந்து அணியில் விளையாடி வருபவர் டோனி க்ரூஸ் (34). ஜேர்மனி அணிக்காக (Germany) இதுவரை 108 போட்டிகளில் விளையாடி க்ரூஸ் 17 கோல்கள் அடித்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணிக்காக 305 போட்டிகளும் (22 கோல்கள்), பாயர்ன் முனிச் அணிக்காக 130 போட்டிகளும் (13 கோல்கள்), பாயர் லெவேர்குசேன் அணிக்காக 43 போட்டிகளும் (10 கோல்கள்) விளையாடியுள்ளார்.
இவரது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் ரியல் மாட்ரிட் அணி UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில், கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி க்ரூஸ் (Toni Kroos) அதிர்ச்சி அளித்துள்ளார்.
உருக்கமான பதிவு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''சூலை 17, 2024யில் ரியல் மாட்ரிட்டில் (Real Madrid) நான் அறிமுகமானது என் வாழ்க்கையை மாற்றிய நாள். ஒரு மனிதராகவும், கால்பந்து வீரராகவும் மாற்றியது. இது உலகின் பாரிய கிளப் அணியில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீஸனின் முடிவில் இந்த அத்தியாயம் முடிவடைகிறது.
என்னை திறந்த மனதுடன் வரவேற்று நம்பிய அனைவருக்கும் நான் குறிப்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால், அன்புள்ள மாட்ரிடிஸ்டாஸ், முதல் நாள் முதல் கடைசி நாள் வரை உங்கள் பாசத்திற்கும், உங்கள் அன்புக்கும் குறிப்பாக நன்றி கூற விரும்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |