பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசி.,அணியை காப்பாற்றிய டோனி
லாகூர் டெஸ்டில் டோனி டி ஸோர்சி சதம் விளாச தென் ஆப்பிரிக்க அணி 269 ஓட்டங்கள் எடுத்தது.
டோனி டி ஸோர்சி
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி லாகூரில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 378 ஓட்டங்கள் குவிக்க, தென் ஆப்பிரிக்க அணி துடுப்பாட்டத்தை துவங்கியது.
ரிக்கெல்டன் 71 ஓட்டங்கள் குவிக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினர்.
நோமன் அலி தென் ஆப்பிரிக்க அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்க, டோனி டி ஸோர்சி (Tony de Zorzi) அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
நோமன் அலி
பொறுப்புடன் ஆடிய டோனி தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அவர் 104 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி 269 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தானின் நோமன் அலி (Noman Ali) 6 விக்கெட்டுகளும், சாஜித் கான் 3 விக்கெட்டுகளும், சல்மான் அஹா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி 109 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது. [J4QKTS ]
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |