நடக்க முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம்! நடைபயணம் தோல்வி என அண்ணாமலை நகைச்சுவை
'என் மண், என் மக்கள்' பாத யாத்திரையில் நடக்க முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியதால் நடைபயணம் தோல்வி அடைந்துவிட்ட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
என் மண், என் மக்கள்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள் யாத்திரை' என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் 168 நாட்களில் பாதயாத்திரையை மேற்கொள்ளும் அண்ணாமலை சென்னையில் நிறைவு செய்கிறார்.
இந்த பாத யாத்திரையை கடந்த ஜூலை 28 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது இருந்து அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேட்டைக்காரன் புதூர் பகுதியில் இருந்து ஆனைமலை வரை அண்ணாமலை நேற்று நடைபயணம் செய்தார்.
நடைபயணம் தோல்வி
நேற்று நடைபயணம் செய்த அண்ணாமலைக்கு வழிநெடுக நல்ல உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் 2 கி.மீ நடைபயணம் செய்து முக்கோண பகுதியில் திறந்த வெளியில் வேனில் இருந்தபடியே உரையாற்றினார்.
அப்போது அவர், "இந்த நடைபயணத்தில் நடக்க முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியதாகவும், அதனால் தன்னுடைய நடைபயணம் தோல்வி அடைந்து விட்டதாகவும் நகைச்சுவையாக" பேசினார்.
இன்றைய #EnMannEnMakkal பயணம், வால்பாறை சட்டமன்றத் தொகுதியில், உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் அருள்பாலிக்கும் ஆனைமலையில் பொதுமக்களின் பேராதரவோடு மிகச் சிறப்பாக நடந்தது. சீதையை மீட்கச் சென்ற ஸ்ரீராமர், மாசாணி அம்மனை வணங்கி அருள் பெற்றுச் சென்று வெற்றி பெற்ற சிறப்புமிக்க தலம்.… pic.twitter.com/4noxJvMcyP
— K.Annamalai (@annamalai_k) September 23, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |