அதிகமாக ஏசி பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்.., என்னென்ன தெரியுமா?
வெளியே சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாததாக இருக்கிறது.
இந்த சமயத்தில் நிச்சயமாக, ஏசி நமக்கு வெப்பத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.
அலுவலகம், வீடு, கார் என எங்கு சென்றாலும் ஏசியின் குளிர்ச்சியை நாடுகிறோம்.
ஆனால், இதன் காரணமாக நம் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
ஏற்படும் பிரச்சனைகள்
ஏசியின் குளிர்ந்த காற்று நமது சுவாசப் பாதையை பாதிக்கிறது. இதனால் சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் வரலாம்.
மேலும், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது.
ஏசி அறையில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், நமது சருமம் வறண்டு போகும். இதனால் தோல் அரிப்பு, வெடிப்பு மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஏசியின் நேரடி காற்று கண்களில் படுவதால் கண்கள் வறண்டு எரிச்சல் உண்டாகலாம்.
அதிக நேரம் ஒரே மாதிரியான குளிர்ச்சியான சூழலில் இருப்பதால் உடலில் சோர்வு மற்றும் உடல் வலி ஏற்படலாம்.
மேலும், குறிப்பாக கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்சனைகள் அதிகமாக வர வாய்ப்புள்ளது.
இயற்கையான வெப்பநிலையில் இருந்து திடீரென குளிர்ச்சியான சூழலுக்கு மாறுவதும், குளிர்ச்சியான சூழலில் இருந்து வெப்பமான சூழலுக்கு மாறுவதும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |