முத்தம் அதிகம் கொடுத்தா பரு வருமாம்; இனி ஜாக்கிரதையா இருங்க
பொதுவாகவே பெண்கள் அதிகமாக எதிர்க்கொள்ளும் ஒரு பிரச்சினை என்றால் அது முகத்தில் ஏற்படக்கூடிய பருக்களால் தான்.
இது எதனால் ஏற்படுகின்றது என்று தெரியாமல் ஆண்களும் பெண்களும் வருந்துவதே அதிகம்.
அந்தவகையில் தற்போதைய ஒர் ஆய்வில் முத்தம் கொடுப்பதாலும் முகத்தில் பருக்கள் அதிகமாக ஏற்படலாம் என தெரியவந்துள்ளது. ஆகவே அத பற்றி சற்று விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
முத்தம் கொடுப்பதால் ஏற்படும் பரு
முத்தம் என்பது அன்பை வெளிக்காட்டும் ஓர் வழியாகும்.
சிறியவர்களுக்கு முத்தம் கொடுப்பதிலும் பதின்ம வயதில் இருப்பவர்களுக்கு முத்தம் கொடுப்பதிலும் அதிக வித்தியாசங்கள் இருகின்றது.
பொதுவாகவே சிறியவர்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டாம் என்று முன்னோர்கள் கூறுவது வழக்கம்.
ஆனால் பதின்ம வயதில் இருப்பவர்களுக்கு ஹார்மோன் பிரச்சினை இருப்பதால் அவர்களுக்கு அடிக்கடி முகத்தில் பருக்கள் ஏற்படுவது வழக்கமாகவே இருக்கும்.
இவ்வேளையில் ஒருவர் முத்தம் கொடுத்தால் முகத்தில் பருக்கள் அதிகமாகலாம் என தெரியவந்துள்ளது.
முத்தம் கொடுப்பதில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. முத்தம் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆனால் பருவும் ஏற்படும்.
எப்படி பரு வரும்?
வாயில் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் அது முத்தம் கொடுக்கும் போது ஒருவருக்கு எளிதில் பரவலாம்.
முத்தம் வாங்கிக் கொள்பவருடைய சருமம் சென்சிடிவ்வாக இருந்தால் பரு அதிகமாக வரும் சருமமாகவோ இருந்தால் மிக எளிதில் தொற்று பரவி பரு அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.
சிலர் முத்தத்தை மென்மையாக கொடுப்பார்கள். ஆனால் ஒரு சிலர் அழுத்தமாக கொடுப்பார்கள்.
இவ்வாறு செய்யும் வேளையில் உதடுகள் எரிச்சல் அடையலாம். உதடுகள் சிவப்பது, எரிச்சல் ஆகியவற்றாலும் சில சமயம் வாய்ப்பகுதியை ஒட்டி பருக்களை உண்டாக்கலாம்.
எனினும் கொடுப்பவரோ பெறுபவரோ உதட்டுக்கு லிப் பாம், லிப்ஸ்டிக் ஆகியவை அணிந்திருந்தால் அதனாலும் பருக்கள் ஏற்படும்.
பருக்கள் உண்டாகாமல் தடுக்க என்ன செய்யலாம்?
- ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது முகத்தைக் கழுவுங்கள்.
-
சருமத்தை அதிக நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும்.
- நிறைய காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் ஆகியவை நிறைந்த ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
-
மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.
- தலையணை உறைகள் மற்றும் துண்டுகள் தவறாமல் மாற்றுங்கள்.
- பருக்கள் வந்தால் அதை கிள்ளவோ, அழுத்தவோ செய்ய வேண்டாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |