பிரான்சில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பிரான்ஸில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசாங்க செய்தித்தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேப்ரியல் அட்டல் கூறியதாவது, நாட்டின் சில பிராந்தியங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால், திட்டமிட்டதை விட விரைவாக பிரான்சின் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்தார்.
ஸ்பெயினுக்கு அருகிலுள்ள Pyrenees-Atlantique பகுதி மற்றும் முக்கிய நகரமான Bordeaux கொண்டிருக்கும் Nouvelle-Aquitaine போன்ற பகுதிகளில் வாரந்தோறும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன என அட்டல் கூறினார்.
மே மாதத்தில் பிரான்ஸ் தனது மூன்றாவது தேசிய ஊரடங்கை தளர்த்திய பின்னர், கடந்த இரண்டு மாதங்களாக பிரான்சின் மருத்துவமனை அமைப்பு மீதான அழுத்தம் படிப்படியாக குறைந்து வருகிறது என அட்டல் குறிப்பிட்டார்.