கொரோனா நோயாளிகள் சுவாசிப்பதை எளிதாக்கியுள்ள ஒரு அருமையான கருவி: கனடாவில் கண்டுபிடிப்பு
கொரோனா நோயே கொடுமை என்றால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பலருக்கும் தெரியும், வெண்டிலேட்டர் என்னும் கருவியைப் பொருத்தும்போது அவர்கள் அனுபவிக்கும் கொடுமை, அதைவிட அதிகம் என்பது!
மூக்கு வழியாக குழாய் ஒன்றை செலுத்தி, அது நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜனை அளிப்பதற்காக வெண்டிலேட்டர்களை பயன்படுத்துவார்கள்.
அதைப் பொருத்தும்போதே, தான் ஒரு நோயாளி என்ற ஒரு உணர்வு வந்துவிடும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு.
இந்நிலையில், அந்த கஷ்டத்தை போக்கும் வகையில் ஒரு அருமையான கருவியைக் கண்டுபிடித்துள்ளனர் கனேடிய ஆய்வாளர்கள் சிலர்.
St.Clair கல்லூரியுடன் இணைந்து, Wendy Foote என்ற பேராசிரியரின் தலைமையில், Canada Hood என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி, விண்வெளிக்கு செல்வோர் அணியும் ஒரு பெரிய தலைக்கவசம் போல உள்ளது.
அதனால் மூக்கு வழியாக குழாய் ஒன்றை திணிக்கவேண்டிய அவசியம் இனி இருக்காது.
அத்துடன், இந்த கருவியின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், பொதுவாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்குமே ஆபத்து உண்டு என்று இருந்த நிலை மாறி, நோயாளி இந்த Canada Hoodஐ அணிவதால் அவருக்கு அருகிலிருப்பவர்களுக்கும் அது பாதுகாப்பானது என்பதால் வரவேற்கத் தக்க ஒரு கருவியாக அது காணப்படுகிறது.