Cryptocurrency: Bitcoin-ஐ விட சிறந்த ஆற்றல் கொண்ட டாப் 10 கிரிப்டோ நாணயங்கள்
Bitcoin-ஐ விட சிறந்த லாபத்தை தரும் ஆற்றலைக் கொண்ட சிறந்த பத்து கிரிப்டோ நாணயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பத்தாண்டுகளுக்கு முன்புதான் உலகின் முதல் கிரிப்டோகரன்சியான Bitcoin அறிமுகமானது. அப்போதிருந்து, நூற்றுக்கணக்கான கிரிப்டோ நாணயங்கள் Cryptocurrency சந்தையில் நுழைந்தன.
பிட்காயின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் அதிக முதலீடு செய்யப்பட்ட கிரிப்டோகரன்சியாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் நிச்சயமாக முதலீடு செய்யத் தகுந்த நிறைய ஆல்ட்காயின்கள் உள்ளன.
அந்த வகையில், பிட்காயினை விட சிறந்த ஆற்றல் கொண்ட டாப் 10 கிரிப்டோகரன்சிகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை உருவாக்க கண்டிப்பாக இருக்க வேண்டிய ஆல்ட்காயின்கள் என்று இதனை குறிப்பிடலாம்.
Ethereum (ETH)
Bitcoin-ஐ விட சிறந்த திறன் கொண்ட கிரிப்டோகரன்சிகளின் பட்டியலில் Ethereum முதலிடத்தில் இருகிறது என்று சொல்லலாம். உலகில் உள்ள எவரும் சுதந்திரமாக அணுகக்கூடிய நிதித் தயாரிப்புகளின் பரவலாக்கப்பட்ட தொகுப்பை (decentralized suite) உருவாக்குவதே இந்த கிரிப்டோவின் நோக்கம். இதனால் இந்த நாணயம் எல்லா இடங்களிலிருந்தும் கவனத்தை ஈர்த்தது. Ethereum என்பது எதையும் வர்த்தகம் செய்ய பயன்படுத்தப்படுகிறது, இதனால் இது சாத்தியமான altcoins-களில் ஒன்றாகும்.
Cardano (ADA)
பரவலாக்கப்பட்ட நிதி தயாரிப்புகளை (decentralized financial products) நிறுவுவதன் மூலம் உலகின் சிறந்த financial operating system-ஆக இருக்க வேண்டும் என்ற அதன் நோக்கத்துடன் இயங்கிவரும் Cardano, வரும் நாட்களில் எந்த அளவிற்கு வளரும் என்பதை ஒருவர் தெளிவாக மதிப்பிட முடியும். நம்பகமான ஆல்ட்காயின்களின் பட்டியலில் Cardano இடம்பெற முக்கியமான காரணங்களில், அதன் இயங்குதன்மை மற்றும் சட்டப்பூர்வ ஒப்பந்தம் (legal contract) ஆகியவை அடங்கும்.
Solana (SOL)
மற்ற நெட்வொர்க்குகளில் இருந்து டோக்கன்களுடன் ஒருங்கிணைக்கும் திறன் காரணமாக, ஆற்றல் கொண்ட கிரிப்டோகரன்ஸிகளில் ஒன்றாக Solana வெளிப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த கிரிப்டோகரன்சி அதிக பரிவர்த்தனை வேகம் மற்றும் குறைவான செயலாக்க சக்தியையும் கொண்டுள்ளது. இவை அனைத்தும் இந்த கிரிப்டோகரன்சி எவ்வளவு சிறந்தது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
Litecoin (LTC)
பிட்காயின் அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கப்பட்ட Litecoin, நிறைய வழிகளில் பிட்காயினைப் போலவே கருதப்படுகிறது. இருப்பினும், அதன் வேகமான பிளாக் ஜெனரேஷன் வீதம் மற்றும் விரைவான பரிவர்த்தனை உறுதிப்படுத்தல் நேரம் பிட்காயினை விட சிறந்த முதலீட்டு விருப்பமாக அமைகிறது.
Dogecoin (DOGE)
Dogecoin நாணயம் வெகுஜன ஊடகங்களில் சில காலமாக பிரபலமாக இருக்கிறது. இது பல வழிகளில் Bitcoin மற்றும் Litecoin போன்றது. குறிப்பிடத் தகுந்தது என்னவென்றால், Dogecoin தொடங்கப்பட்டதிலிருந்து அதன் மதிப்பு அதிவேக உயர்வை கண்டது என்பது தான். சிறந்த முதலீட்டை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது கதவுகளைத் திறக்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவரான, Tesla மற்றும் SpaceX நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி Elon Musk கூட இந்த நாணயத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Ripple (XRP)
ஆன்லைன் கட்டணச் செயலாக்கத்தை (online payment processing) முன்னெப்போதையும் விட சீராகச் செய்யும் திறனுக்காக Ripple உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கவனத்தைப் பெற்றுள்ளது. Ripple's XRP நாணயம் நிச்சயமாக முதலீடு செய்யத் தகுதியான ஆல்ட்காயின்களில் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை.
Polkadot (DOT)
இயங்குதன்மை, அளவிடும் தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவை Polkadot எல்லோரது கவனத்தையும் ஈர்த்ததற்கான பல காரணங்களில் சில என்று கூறலாம். மலிவான மற்றும் வேகமான பரிவர்த்தனையில் இது சிறந்த ஒன்றாக உள்ளது. அது மட்டுமின்றி, Polkadot-ன் பிளாக்செயின் விரைவில் கூடுதல் அம்சங்களை இயக்க தயாராக உள்ளது, இதனால் இது பிட்காயினுக்கு எதிராக போட்டியிட எல்லா காரணங்களையும் கொண்ட ஒரு ஆல்ட்காயினாக இது மாறும் என கூறப்படுகிறது.
Tether (USDT)
டெதர் என்பது அமெரிக்க டொலர்கள் மற்றும் யூரோ போன்ற Fiat நாணயங்களால் ஆதரிக்கப்படும் நிலையான altcoin ஆகும் (Stable Coin). கிரிப்டோகரன்சி சந்தை எவ்வளவு நிலையற்றது என்பதைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர் அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை என்றால் முதலீடு செய்வதற்கு சிறந்த கிரிப்டோகரன்சியாக இது இருக்கும்.
Binance coin (BNB)
உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிமாற்றங்களில் ஒன்றான Binance, அதன் சொந்த நாணயத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இது Binance-ன் பரிமாற்ற மேடையில் வர்த்தகத்தை எளிதாக்கும் ஒரு வழிமுறையாக தொடங்கப்பட்டது. ஆனால் இன்று, இது வர்த்தகம், பணம் செலுத்துதல் மற்றும் பயண ஏற்பாடுகளை பதிவு செய்வதற்கான திறனைக் கொண்டுள்ளது. Bitcoin, Ethereum நாணயங்களுக்கு அடுத்து சிறந்த நாணயமாக இது இருக்கிறது, நல்ல லாபத்தையும் கொடுத்துவருகிறது.
Stellar (XLM)
ஸ்டெல்லர் என்பது ஒரு திறந்த பிளாக்செயின் நெட்வொர்க் ஆகும், அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எந்தவொரு நாணயத்திற்கும் இடையே எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை அனுமதிக்கும் வகையில் இந்த அமைப்பு உள்ளது.
இவை அனைத்தும் இந்த ஆல்ட்காயின்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும், மேலும் அதில் முதலீடு செய்வது பின்னர் வருத்தப்பட வேண்டிய ஒரு முடிவாக இருக்காது.