மறைந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவின் மேஜிக் பந்துவீச்சுகள் - வைரல் வீடியோ
அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அவரது கிரிக்கெட் சாதனைகள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஷேன் வார்ன் 1992ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரை அவுஸ்திரேலிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும், 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவரது மேஜிக் பந்து வீச்சில் மயங்காதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம்.
அந்த வகையில் அவரின் டாப் 10 மேஜிக் பந்துவீச்சின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
1/2: Top 10 deliveries of #ShaneWarne
— Khan (@khanmab) March 4, 2022
There is no leg spinner any more in near future. pic.twitter.com/IWP8enU68z