Forbes 2024: உலகின் 10 பெரும் பணக்காரர்கள் யார்? அம்பானி பிடித்துள்ள இடம்!
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிடும் உலகின் செல்வந்தர்கள் இந்த ஆண்டு பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம் முதலிடம் பிடித்துள்ளது, அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் எலான் மஸ்க் உள்ளார்.
போர்ப்ஸ் பில்லியனர்கள் தரவரிசை (Forbes' Billionaires List)
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிடும் உலகின் செல்வந்தர்கள் பட்டியல் (Forbes' Billionaires List) ஒவ்வொரு வருடமும் மாறிவரும் செல்வம் சார்ந்த தகவல்களை காட்சிப்படுத்துகிறது.
இந்த வருடம் 2024 பட்டியலில், சில பரிச்சயமான பெயர்கள் முன்னிலையில் இருப்பதோடு, உலகின் பத்திர பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக இணைந்தவர்களையும் காண முடிகிறது.
இந்த டைட்டன்களின் உலகத்திற்குள் நுழைந்து, அவர்கள் கட்டிய ராஜ்ஜியங்களைப் பற்றி பார்ப்போம்.
1.பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம் (Bernard Arnault & family)
Net Worth: $233 பில்லியன்
தொழில்: ஃபேஷன் & சில்லறை விற்பனை
இரண்டாவது வருடமும் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்பவர் பெர்னார்ட் அர்னால்ட். லூயி விட்டான் (Moët Hennessy Louis Vuitton) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவர் ஆவார்.
Dior, Fendi, Louis Vuitton போன்ற பிரபலமான (Luxury) பிராண்டுகள் அனைத்தையும் உள்ளடக்கிய இந்த பிரெஞ்சு நிறுவனம், உலகில் அர்னால்ட்டின் ஆதிக்கத்தை உறுதி செய்கிறது.
2.எலான் மஸ்க் (Elon Musk)
Net Worth: $195 பில்லியன்
தொழில்:: ஆட்டோமொபைல் மற்றும் தொழில்நுட்பம்
எப்போதும் புதுமைத் திட்டங்களுடன் இருக்கும் எலான் மஸ்க் இரண்டாவது இடத்தை வலுவாக தக்கவைத்துள்ளார்.
அவரது மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது, அதே நேரம் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வின் எல்லைகளை விரிவுபடுத்துகிறது.
3.ஜெஃப் பெசோஸ்(Jeff Bezos)
Net Worth: $194 பில்லியன்
தொழில்: ஆன்லைன் சில்லறை விற்பனை மற்றும் தொழில்நுட்பம்
மின்-வணிக துறையின் ராஜாவான அமேசான்(AMAZON), ஜெஃப் பெசோஸ்-க்கு தொடர்ந்து பண மழை பொய்கிறது.
அவர் முதல் மூன்று இடங்களில் தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளார். Blue Origin உடன் விண்வெளி ஆய்வில் அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் அவரது பரந்த பங்குகளை மேலும் பன்முகப் படுத்துகின்றன.
4.மார்க் ஜுக்கர்பெர்க்(Mark Zuckerberg)
Net Worth: $177 பில்லியன்
தொழில்: தொழில்நுட்பம்
சமூக வலைதள மன்னராக மார்க் ஜுக்கர்பெர்க் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். பேஸ்புக், இப்போது மெட்டா பிளாட்பார்ம்ஸ் (Meta Platforms) என்ற பெயரில் இயங்கி வருகிறது, இது இணைய உலகில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, இதன் மூலம், செல்வந்தர்களின் பட்டியலில் ஜுக்கர்பெர்க் தனது இடத்தை உறுதி செய்து கொள்கிறார்.
5.லாரி எல்லிசன்(Larry Ellison)
சொத்து மதிப்பு: $141 பில்லியன்
தொழில்: தொழில்நுட்பம்
மென்பொருள் நிறுவனமான ஆரக்கிளின்(Oracle) இணை நிறுவனரான லாரி எல்லிசன்(Larry Ellison) இந்த வருடம் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி இருக்கிறார். தொழில்நுட்ப துறையில் அவரது தொடர்ச்சியான செல்வாக்கு அவருக்கு உயர்தர வரிசையில் இடம் பெறச் செய்துள்ளது.
6. வாரன் பஃபெட் - சொத்து மதிப்பு: $133 பில்லியன், துறை: நிதி & முதலீடு
7. பில் கேட்ஸ் - சொத்து மதிப்பு: $128 பில்லியன், துறை: தொழில்நுட்பம்
8. ஸ்டீவ் பால்மர் - சொத்து மதிப்பு: $121 பில்லியன், துறை: தொழில்நுட்பம்
9. முகேஷ் அம்பானி - சொத்து மதிப்பு: $116 பில்லியன், துறை: பன்முக (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்)
10. லாரி பேஜ்(Larry Page) - சொத்து மதிப்பு: $114 பில்லியன், துறை: தொழில்நுட்பம் ( கூகுள் (Google)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
forbes top 10 billionaires 2024,
richest people in the world 2024,
forbes billionaires list 2024 net worth,
elon musk net worth 2024,
jeff bezos net worth 2024,
mark zuckerberg net worth 2024,
warren buffett net worth 2024,
bill gates net worth 2024,
top 10 richest people by industry 2024,
luxury goods billionaires 2024,