உலகில் அதிக சம்பளம் பெறும் 10 கால்பந்து நட்சத்திரங்கள்... அசைக்க முடியாத முதலிடத்தில் ஒருவர்
சவுதி அரேபியா தனது பணபலத்தை கால்பந்து உலகிற்கு வெளிக்காட்டியதால், அசைக்க முடியாத உச்சத்திற்கு சென்றுள்ளார் பிரபல போர்த்துகல் நட்சத்திரம்.
சிட்டி அணியின் Kevin De Bruyne
உலகில் அதிக சம்பளம் பெறும் 10 கால்பந்து நட்சத்திரங்களில் நால்வர் தற்போது சவுதி அரேபிய அணிகளில் விளையாடுகின்றனர். ஐரோப்பிய கால்பந்து உலகில் இருந்து வெளியேறினாலும் லியோனல் மெஸ்ஸி தற்போதும் பெருந்தொகை சம்பாதிக்கிறார்.
@getty
PSG அணியில் இருந்து வெளியேற முடிவு செய்த பின்னரும் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பேவின் சம்பளமும் உயர்ந்துள்ளது. இந்த வரிசையில், 10வது இடத்தில் ஹரி கேன் உள்ளார். டோட்டன்ஹாம் அணியிலிருந்து பேயர்ன் முனிச் அணியில் இணைந்துள்ள அவர் தற்போது ஆண்டுக்கு 36 மில்லியன் டொலர்களை சம்பளமாக பெறுகிறார்.
9வது இடத்தில் சிட்டி அணியின் Kevin De Bruyne உள்ளார். இவர் ஆண்டுக்கு 39 மில்லியன் டொலர்களை சம்பளமாக பெறுகிறார். அத்துடன் சமீபத்தில் தான் McDonald உணவகத்திற்கான விளம்பரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
8வது இடத்தில் முன்னாள் பேயர்ன் முனிச் அணி வீரரான Sadio Mane உள்ளார். இவர் ஆண்டுக்கு 52 மில்லியன் டொலர் தொகையை சம்பாதிக்கிறார். தற்போது சவுதி அரேபியாவின் அல் நஸ்ஸர் அணியில் இணைந்துள்ளார்.
7வது இடத்தில் லிவர்பூல் நம்பிக்கை நட்சத்திரம் Mohamed Salah உள்ளார். இவர் ஆண்டுக்கு 53 மில்லியன் டொலர்களை சம்பாதிக்கிறார். இருப்பினும், சவுதி அரேபியா அணி ஒன்றில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
6வது இடத்தில் மன்செஸ்டர் சிட்டி நட்சத்திர வீரரான Erling Haaland உள்ளார். இவர் ஆண்டுக்கு 58 மில்லியன் டொலர் சம்பாதிக்கிறார். 5வது இடத்தில் முன்னாள் ரியல் மாட்ரிட் நட்சத்திரமான Karim Benzema உள்ளார். தற்போது சவுதி அரேபியாவின் Al-Ittihad அணியில் இணைந்துள்ள இவர் ஆண்டுக்கு 106 மில்லியன் டொலர் சம்பளமாக பெறுகிறார்.
சேம்பியன் லியோனல் மெஸ்ஸி
4வது இடத்தில் ஐரோப்பிய கால்பந்து உலகில் கொடிகட்டி பறக்கும் Kylian Mbappe உள்ளார். இவர் PSG அணியில் இருந்து வெளியேற முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், அந்த அணி நிர்வாகம் அதிக தொகை அளித்து தக்கவைக்கவே முயற்சிகள் முன்னெடுத்து வருகிறது.
@getty
இவர் ஆண்டுக்கு 110 மில்லியன் டொலர் சம்பளமாக பெறுகிறார். 3வது இடத்தில் முன்னாள் PSG அணி நட்சத்திரமான Neymar உள்ளார். இவர் தற்போது சவுதி அரேபியாவின் அல் ஹிலால் அணியில் இணைந்துள்ளார். ஆண்டுக்கு 112 மில்லியன் டொலர் தொகையை சம்பளமாக பெறுகிறார்.
2வது இடத்தில் உலக கிண்ணம் சேம்பியனான லியோனல் மெஸ்ஸி உள்ளார். இவர் ஆண்டுக்கு 135 மில்லியன் டொலர்கள் சம்பளமாக பெறுகிறார். முதலிடத்தில், அசைக்க முடியாத உச்சத்தில் போர்த்துகல் நட்சத்திரமான Cristiano Ronaldo உள்ளார்.
ஐந்து முறை Ballon d'Or விருது வென்ற ரொனால்டோ தற்போது அல் நஸ்ஸர் அணியில் இணைந்துள்ளார். ஆண்டுக்கு 260 மில்லியன் டொலர்கள் தொகையை சம்பளமாக பெறுகிறார். இவர் சவுதி அரேபிய அணியில் இணைந்த பின்னர் தான் பல ஐரோப்பிய கால்பந்து நட்சத்திரங்கள் சவுதி அரேபியாவுக்கு படையெடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |