2024 -ம் ஆண்டில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட முதல் 10 இடங்கள்.., பட்டியல் வெளியீடு
2024 -ம் ஆண்டு முடிவடைய சில நாட்களே உள்ள நிலையில் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய சுற்றுலா தலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் 10 இடங்கள்
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இடங்கள், நபர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 2024 -ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 பயண இடங்களின் பட்டியல் கூகுள் இயர் இன் சர்ச் (Google Year in Search) 2024 அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட பயண இடங்கள் (Travel Destinations) பட்டியலில் முதலிடத்தில் அஜர்பைஜான் உள்ளது. அஜித்குமார் நடிக்கும் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு இங்கு தான் நடைபெற்றது.
இந்த பட்டியலில் இந்திய சுற்றுலா தலங்களை பொறுத்தவரை மணாலி, ஜெய்ப்பூர், அயோத்தி, காஷ்மீர், தெற்கு கோவா ஆகிய இடங்கள் உள்ளன.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதை தொடர்ந்து அங்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இதனால், அயோத்தியும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
1. அஜர்பைஜான்
2. பாலி
3. மணாலி
4. கஜகஸ்தான்
5. ஜெய்ப்பூர்
6. ஜார்ஜியா
7. மலேசியா
8. அயோத்தி
9. காஷ்மீர்
10. தெற்கு கோவா
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |