உலகின் மிக விலை உயர்ந்த 10 கால்பந்து கிளப்புகள்., PSG பிடித்த இடம் என்ன?
ஃபோர்ப்ஸ் (Forbes) நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி மிகவும் மதிப்புமிக்க கால்பந்து கிளப்புகளின் தரவரிசையில் சில முக்கிய ஐரோப்பிய அணிகளே உள்ளன.
இந்த முதல் 10 அணிகள் பட்டியலில் பிரித்தானியாவின் புகழ்பெற்ற Big Six club-கள் அனைத்தும் தங்கள் நிலைகளை உறுதி செய்துள்ளன.
மேலும் அவற்றுடன், பிரான்சின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் மற்றும் ஜேர்மனியின் பேயர்ன் முனிச் ஆகியவையும் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
உலகின் முதல் 10 மதிப்புமிக்க கால்பந்து கிளப்புகளைப் பார்ப்போம்.
10. அர்செனல் (Arsenal F.C.)
பிரித்தானியாவின் வடக்கு லண்டன் Islington பகுதியை தலைமையிடமாகக் கொண்ட Arsenal F.C. உலகின் மதிப்புமிக்க டாப் 10 கால்பந்தாட்ட கிளப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த கிளப்பின் மதிப்பு 2.26 பில்லியன் டொலர் ஆகும். (இலங்கை பணமதிப்பில் ரூ. 69,023 கோடி).
9. டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (Tottenham Hotspur F.C.)
லண்டன் Tottenham-ஐ தலைமையிடமாக கொண்ட Tottenham Hotspur F.C., உலகின் மதிப்புமிக்க டாப் 10 கால்பந்தாட்ட கிளப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த கிளப்பின் மதிப்பு 2.8 பில்லியன் டொலர் ஆகும். (இலங்கை பணமதிப்பில் ரூ. 85,516 கோடி).
8. செல்சியா (Chelsea F.C.)
பிரித்தானியாவின் West London, Fulham-ஐ சேர்ந்த Chelsea கால்பந்தாட்ட கிளப், 3.1 பில்லியன் டொலர் மதிப்புடன் இந்த டாப் 10 பட்டியலில் 8-ஆம் இடத்தில் உள்ளது. (இலங்கை பணமதிப்பில் ரூ.94,678 கோடி)
7. பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (Paris Saint-Germain)
பட்டியலில் 7-ஆம் இடத்தில் உள்ள பிரான்ஸைச் சேர்ந்த பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்பின் மதிப்பு 4.21 பில்லியன் டொலர் ஆகும். (இலங்கை பணமதிப்பில் ரூ. 1,28,579 கோடி)
6. பேயர்ன் முனிச் (FC Bayern Munich)
ஜேர்மனியின் Bavaria மாகாணத்தில் உள்ள Munich நகரத்தை தலைமை இடமாகக் கொண்ட FC Bayern Munich இந்த பட்டியலில் ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த கிளப்பின் மதிப்பு 4.86 பில்லியன் டொலர் ஆகும். (இலங்கை பணமதிப்பில் ரூ.1,48,431 கோடி).
5. மான்செஸ்டர் சிட்டி (Manchester City F.C.)
பிரித்தானியாவின் Manchester பகுதியை தலைமையிடமாகக் கொண்ட இந்த மான்செஸ்டர் சிட்டி கிளப் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த கிளப்பின் மதிப்பு 4.99 பில்லியன் டொலர் ஆகும். (இலங்கை பணமதிப்பில் ரூ.1,52,402 கோடி).
4. லிவர்பூல் (Liverpool F.C.)
பிரித்தானியாவின் Liverpool நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட லிவர்பூல் கால்பந்தாட்ட கிளப் உலகின் நான்காவது மதிப்பு கொண்ட கிளப் ஆகும்.
இதன் மதிப்பு 5.29 பில்லியன் டொலர் ஆகும். (இலங்கை பணமதிப்பில் ரூ.1,61,565 கோடி).
3. பார்சிலோனா (FC Barcelona)
ஸ்பெயினின் Cataloniaவில் உள்ள பார்சிலோனாவை தளமாகக் கொண்ட FC Barcelona உலகின் மூன்றாவது மதிப்புமிகுந்த கிளப் ஆகும்.
இதன் மதிப்பு 5.51 பில்லியன் டொலர் ஆகும். (இலங்கை பணமதிப்பில் ரூ.1,68,284 கோடி).
2. மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United F.C.)
பிரித்தானியாவின் Manchester நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த மான்செஸ்டர் யுனைடெட் உலகின் இரண்டாவது மதிப்புமிக்க கிளப் ஆகும். இதன் மதிப்பு 6 பில்லியன் டொலர் ஆகும். (இலங்கை பணமதிப்பில் ரூ.1,83,249 கோடி)
1. ரியல் மாட்ரிட் (Real Madrid CF)
கடந்த ஆண்டு Champions League மற்றும் La Liga வெற்றி மற்றும் இந்த முறை Copa del Rey பட்டத்தின் பின்னணியில், ரியல் மாட்ரிட் மீண்டும் உலகின் மிகவும் மதிப்புமிக்க கால்பந்து கிளப்பாக உள்ளது.
இதன் மதிப்பு 6.07 பில்லியன் டொலர் ஆகும். (இலங்கை பணமதிப்பில் ரூ. 2,04,628 கோடி)
Arsenal, Tottenham Hotspur, Chelsea, Paris Saint-Germain, Bayern Munich, Manchester City, Liverpool, Barcelona, Manchester United, Real Madrid, Top 10 Most Valuable Football Clubs