பரிசுத் தொகையின் அடிப்படையில் உலகின் முதல் 10 பணக்கார டி20 லீக்குகள்
பரிசுத் தொகையின் அடிப்படையில் உலகின் முதல் 10 பணக்கார டி20 லீக்குகளை இங்கே பார்க்கலாம்.
கிரிக்கெட் உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். அதில் T20 (Twenty-20) என்கிற 20 ஓவர் கிரிக்கெட் வடிவம் மிகவும் உற்சாகமான ஒன்றாகும்.
டி20 கிரிக்கெட்டின் எழுச்சியுடன், பல லீக்குகள் உலகம் முழுவதும் உருவாகி, வெற்றி பெறும் அணிகளுக்கு பெரும் பரிசுத் தொகையை வழங்குகின்றன.
அவ்வாறு பரிசுத் தொகையின் அடிப்படையில் உலகின் முதல் 10 பணக்கார டி20 லீக்குகள் என்னென்ன என்பதை வரிசையாக பாப்போம்.
1. இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League)
IPL என உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் Indian Premier League, இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆண்களுக்கான Twenty-20 கிரிக்கெட் லீக் ஆகும். 2007-இல் BCCI ஆல் நிறுவப்பட்ட லீக்கில், பத்து நகரங்களைச் சார்ந்த அணிகள் போட்டியிடுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட கோடையில் ஐபிஎல் நடத்தப்படுவது வழக்கம்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் வெற்றிபெறும் அணிக்கு இந்திய பணமதிப்பில் ரூ.20 கோடி வழங்கப்படுகிறது. இது இலங்கை பணமதிப்பில் ரூபா.73.61 கோடி.
2. SA20 லீக்
SA20, தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படும் Twenty-20 ஃபிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியாகும். இதுCricket South Africa-வால் ஏற்பாடு செய்யப்பட்டு 2022-23 பருவத்தில் முதலில் போட்டியிட்டது. இதில் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் உள்ள ஆறு அணிகள் போட்டியிடுகின்றன.
SA20 லீக்கில் வெற்றிபெறும் அணிக்கு பரிசுத்தொகையாக 35 மில்லியன் Rand வழங்கப்படுகிறது. இலங்கை பணமதிப்பில் ரூ.56.36 கோடி.
2024 SA20 போட்டியில் பரிசுத்தொகை இரட்டிப்பாகலாம் என கூறப்படுகிறது.
3. கரீபியன் பிரீமியர் லீக் - Caribbean Premier League (CPL)
கரீபியன் பிரீமியர் லீக்கில் வெற்றிபெறும் அணிக்கு பரிசுத்தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படுகிறது. இலங்கை பணமதிப்பில் ரூ. 8.30 கோடி ஆகும்.
4. பெண்கள் பிரிமியர் லீக் (Women’s Premier League)
Women’s Premier League இந்தியாவில் உள்ள பெண்கள் Twenty20 கிரிக்கெட் franchise லீக் ஆகும். இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) சொந்தமானது.
மார்ச் 2023-இல் விளையாடிய முதல் சீசனில், மும்பை இந்தியன்ஸ் தொடக்க பட்டத்தை வென்றது.
பெண்கள் பிரிமியர் லீக்கில் வெற்றிபெறும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ. 6 கோடி வழங்கப்படுகிறது. இலங்கை பணமதிப்பில் ரூ. 22 கோடி ஆகும்.
5. ILT20 லீக் (International League T20)
சர்வதேச லீக் டி20 ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடத்தப்படும் டி20 கிரிக்கெட் போட்டியாகும். இதற்கு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
International League T20 லீக்கில் வெற்றிபெறும் அணிக்கு பரிசுத்தொகையாக 7,00,000 அமெரிக்க டொலர் வழங்கப்படுகிறது. இது இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 21 கோடி ஆகும்.
6. பாகிஸ்தான் சூப்பர் லீக் (Pakistan Super League)
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) என்பது பாகிஸ்தானில் நடத்தப்படும், ஆறு நகரங்களைச் சார்ந்த அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான twenty20 கிரிக்கெட் லீக் ஆகும். 2015-இல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்டது.
2023 பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெற்றிபெறும் அணிக்கு பரிசுத்தொகையாக 120 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் வழங்கப்படுகிறது. இது இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 13 கோடி ஆகும்.
7. பிக் பாஷ் லீக் (Big Bash League)
பிக் பாஷ் லீக் (BBL) என்பது அவுஸ்திரேலிய ஆண்கள் twenty20 கிரிக்கெட் லீக் ஆகும், இது Cricket Australia-வால் 2011-இல் நிறுவப்பட்டது.
2023 பிக் பாஷ் லீக்கில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுத்தொகையாக 5,00,000 அவுஸ்திரேலிய டொலர் வழங்கப்பட்டது. இது இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.10 கோடி ஆகும்.
8. பெண்கள் பிக் பாஷ் லீக் (Women’s Big Bash League)
பெண்கள் பிக் பாஷ் லீக்கில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுத்தொகையாக 5,00,000 அவுஸ்திரேலிய டொலர் வழங்கப்பட்டது. இது இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.10 கோடி ஆகும்.
9. பங்களாதேஷ் பிரீமியர் லீக் (Bangladesh Premier League)
பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) என்பது வங்கதேசத்தில் நடத்தப்படும் தொழில்முறை இருபது20 கிரிக்கெட் லீக் ஆகும்.
வங்கதேசத்தில் நடைபெறும் மூன்று தொழில்முறை கிரிக்கெட் லீக்குகளில் பிபிஎல் ஒன்றாகும். இது உலகில் அதிகம் பேர் கலந்து கொண்ட 16வது பிரீமியர் லீக் ஆகும்.
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் வெற்றிபெறும் அணிக்கு பரிசுத்தொகையாக Tk 2 வழங்கப்படும். இது இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.5.5 கோடி ஆகும்.
10. The Hundred (Men’s & Women’s)
The Hundred என்பது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள அணிகளை உள்ளடக்கிய 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியாகும். இது 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்றது.
The Hundred-இல் வெற்றிபெறும் அணிக்கு பரிசுத்தொகையாக 125,000 Pounds வழங்கப்படும். இது இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.4.8 கோடி ஆகும்.
You May Like This Video
top 10 richest T20 leagues in the world, Indian Premier League Prize Money, IPL Prize Money, BPL Prize Money, BBL Prize Money, SA20 Prize Money