இந்தியாவின் டாப் 10 பணக்கார கோயில்கள்.., பட்டியல் இதோ

By Yashini Jan 23, 2024 07:42 AM GMT
Report

கோயில்களுக்கு பக்தர்களின் வருகை, செலுத்தக்கூடிய காணிக்கை, கோயில்களின் சொத்து மதிப்பு அடிப்படையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

1. திருப்பதி ஏழுமலையான் கோயில், ஆந்திர பிரதேசம்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலுக்கு சொந்தமாக 3 லட்சம் கோடி அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 50 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.       

திருப்பதி ஏழுமலையான் கோயில், ஆந்திர பிரதேசம்

2. பத்மநாபசாமி கோயில், கேரளா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது.

பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலுக்கு சொந்தமாக 1.20 லட்சம் கோடி சொத்துக்கள் உள்ளன.

பத்மநாபசாமி கோயில், கேரளா

3. சபரிமலை ஐய்யப்பன் கோயில், கேரளா

கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் சொத்து மதிப்பு 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 10,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மதிப்பு கோயிலின் நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் பிற சொத்துக்களின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது.

சபரிமலை ஐய்யப்பன் கோயில், கேரளா

4. வைஷ்ணவி தேவி கோயில், ஜம்மு

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சக்திவழிபாட்டு தலமான வைஷ்ணவி தேவி கோயில் கத்ரா நகரத்திற்கு அருகில் உள்ள மலையின் உச்சியில் அமைந்துள்ளது.

16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் 1800 கிலோ தங்கம் உள்ளது-. 2000 கோடி ரொக்கம் கோயில் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

வைஷ்ணவி தேவி கோயில், ஜம்மு

5. குருவாயூர் கிருஷ்ணன் கோயில், கேரளா

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயில் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயிலின் பிரதான கோபுரம் 100 அடி உயரம் கொண்டது.

இந்த கோயிலுக்கு 1737 கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத் தொகை உள்ளது. கோயிலுக்கு சொந்தமாக 271 ஏக்கர் நிலம் உள்ளது.

குருவாயூர் கிருஷ்ணன் கோயில், கேரளா

6. அமிர்தசரஸ் பொற்கோயில், பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரத்தில் 1577ஆம் ஆண்டு சீக்கிய மத குரு ராம் தாஸால் இக்கோயில் நிறுவப்பட்டது.

இந்த கோயிலில் 400 கிலோ தங்க மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் ஆண்டு வருவாய் 500 கோடியாக உள்ளது.

அமிர்தசரஸ் பொற்கோயில், பஞ்சாப்

7. ஷீரடி சாய்பாபா கோயில், மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டுள்ள சாய்பாபா கோயில் இந்தியாவின் புகழ்பெற்ற வழிபாட்டு தளங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த கோயிலுக்கு கட்நத 2022ஆம் ஆண்டு ரூ. 400 கோடி அளவுக்கு நன்கொடை வந்துள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 22,000 பக்தர்கள் வருவதாக கூறுகின்றன.

ஷீரடி சாய்பாபா கோயில், மகாராஷ்டிரா

8. மீனாட்சி அம்மன் கோயில், மதுரை

ஆன்மீகத் தளமான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ரூ. 6 கோடி ஆண்டு வருவாயை கொண்டுள்ளது. மேலும், கோயிலுக்கு சொந்தமான பல்வேறு நிலங்கள் உள்ளது.

தினசரி சராசரியாக சுமார் 20,000 பக்தர்கள் வரை வந்து செல்லும் தளமாக விளங்குகிறது.

மீனாட்சி அம்மன் கோயில், மதுரை

9. சித்தி விநாயகர் கோயில், மும்பை

மும்பை சித்தி விநாயகம் கோயில் இரண்டு நூற்றாண்டுகள் பழமை மிக்க, நாட்டின் செல்வம் மிக்க திருக்கோயில்களில் ஒன்றாக உள்ளது.

இங்குள்ள மூலவருக்கு 4 கிலோ தங்க அணிகலன்கள் உள்ளது. 125 கோடி ரூபாய் நிகர மதிப்பு உள்ளது. மேலும் தினசரி ரூ.30 லட்சம் வருமானம் பதிவாகியுள்ளது.

சித்தி விநாயகர் கோயில், மும்பை

10. சோமநாதர் கோயில், குஜராத்

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சோமநாதர் கோயில், இந்தியாவில் உள்ள பன்னிரெண்டு புனித ஜோதிர் லிங்கங்களில் முதல் தலமாக உள்ளது.

கோயிலுக்கு சொந்தமாக 1700 ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சொத்துக்கள் உள்ளது. கோயிலின் உட்புறத்தில் 130 கிலோ தங்கமும், அதன் கோபுரத்தில் 150 கிலோ தங்கமும் உள்ளது.

2023 ஆம் ஆண்டில், கோயில் அறக்கட்டளையின் கீழ் சுமார் 6 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

சோமநாதர் கோயில், குஜராத்  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US