சாம்பியன்ஸ் டிராஃபியில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்: டாப் 5யில் இலங்கை ஜாம்பவான்கள்
இதுவரை சாம்பியன்ஸ் டிராஃபியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களின் பட்டியலை இங்கு காண்போம்.
பாகிஸ்தானில் நாளை 9வது சாம்பியன்ஸ் டிராஃபியில் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் விளையாடும் 8 அணிகளில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளும் இடம்பெறவில்லை.
ஆனாலும், இதுவரை சாம்பியன்ஸ் டிராஃபியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்த இரண்டு அணிகளின் வீரர்களே முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளனர்.
17 இன்னிங்ஸ்களில் 791 ஓட்டங்கள் குவித்து மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் (Chris Gayle) இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக இலங்கை ஜாம்பவான் வீரர் மஹேல ஜெயவர்த்தனே (Mahela Jayawardene) உள்ளார். மூன்றாவது இடத்தில் ஷிகர் தவானும் (இந்தியா), 4வது இடத்தில் குமார் சங்ககாராவும் (இலங்கை) உள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) 5வது இடத்தில் உள்ளார்.
அதிக ஓட்டங்கள் எடுத்த 10 வீரர்கள்:
- கிறிஸ் கெய்ல் - 791 ஓட்டங்கள் (17 இன்னிங்ஸ்)
- மஹேல ஜெயவர்த்தனே - 742 ஓட்டங்கள் (21 இன்னிங்ஸ்)
- ஷிகர் தவான் - 701 ஓட்டங்கள் (10 இன்னிங்ஸ்)
- குமார் சங்ககாரா - 683 ஓட்டங்கள் (21 இன்னிங்ஸ்)
- சவுரவ் கங்குலி - 665 ஓட்டங்கள் (11 இன்னிங்ஸ்)
- ஜேக்யூஸ் கல்லிஸ் - 665 ஓட்டங்கள் (17 இன்னிங்ஸ்)
- ராகுல் டிராவிட் - 627 ஓட்டங்கள் (19 போட்டிகள்)
- ரிக்கி பாண்டிங் - 593 ஓட்டங்கள் (18 போட்டிகள்)
- ஷிவ்நரைன் சந்தர்பால் - 587 ஓட்டங்கள் (16 போட்டிகள்)
- சனத் ஜெயசூரியா - 536 ஓட்டங்கள் (20 போட்டிகள்)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |