உடல் எடையைக் குறைக்க உதவும் 5 முக்கிய உணவுமுறை.., என்னென்ன தெரியுமா?
தற்போது பெரும்பாலோருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உடல் எடை அதிகரிக்கிறது.
அந்தவகையில், உடல் எடையைக் குறைக்க உதவும் 5 முக்கிய உணவுமுறை குறித்து பார்க்கலாம்.

1. தாவர அடிப்படை உணவுமுறை- இதில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவை அதிகம் உணவில் சேர்க்கப்படுகிறது. இது உடல் எடையைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
2. இடைவிடாத உண்ணாவிரதம்- குறிப்பிட்ட நேர வரம்புகளுக்குள் உணவு அளவில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சாப்பிடுவதில் கவனம் செலுத்துகின்றன. இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.
3. உயர் புரோட்டீன் உணவுமுறை- இதில் உயர்தரமான புரோட்டீன் நிறைந்த உணவுகளான பருப்பு வகைகள், முட்டை, பால், மீன், டோஃபு மற்றும் தோல் நீக்கிய இறைச்சிகள் போன்றவைற்றை தேர்ந்தெடுத்து உண்பது.
4. குடல் ஆரோக்கிய உணவுமுறை- இதில் புளித்த உணவுகள், நார்ச்சத்துள்ள உணவுகளான பழங்கள் காய்கறிகள், புரோபயோடிக்குகள் மற்றும் ப்ரீபயோடிக்குகள் போன்றவை அடங்கும். இது செரிமான மண்டலத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
5. மத்திய தரைக்கடல் மற்றும் DASH உணவுமுறை- இது முழு உணவுகளான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ், விதைகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |