இந்தியாவின் டாப்-5 EV கார்கள்: ரூ.11 லட்சம் முதல்., எதை வாங்கலாம்?
பெட்ரோல், டீசல் வாகனங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த வாடிக்கையாளர்கள் தற்போது மின்சார வாகனங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், புதிய கார் வாங்குவோர் மின்சார வாகனங்களை நோக்கி திரும்புகின்றனர்.
இதனால், அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார வாகனங்களில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன.
வீட்டு மாடியிலேயே Take-Off, Landing பண்ணலாம்., எலக்ட்ரிக் ஏர் காப்டர்களை அறிமுகப்படுத்தும் Maruti Suzuki
இந்நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டு (2024) சந்தையில் கிடைக்கும், ரூ.11 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையிலான டாப்-5 எலக்ட்ரிக் கார்களை இங்கே பார்க்கலாம்.
Mahindra XUV E8

மஹிந்திரா நிறுவனம் உள்நாட்டில் EV-களுக்கான வளர்ந்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, XUV 700 வடிவத்தில் XUV E8 என்ற மிட்-ரேஞ்ச் எலக்ட்ரிக் காரை கொண்டு வர உள்ளன.
இந்த மொடலில் 60 kW மற்றும் 80 kW பேட்டரி திறன் கொண்ட இரண்டு பேட்டரிகள் உள்ளன மற்றும் இதன் விலை ரூ.35-40 லட்சம் வரை இருக்கும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Citroen C3X

Citroen C3 காரை Citroen C3X என்ற பெயரில் மின்சார பதிப்பில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் இந்த காரின் விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கும்.
44 கிலோவாட் பேட்டரி கொண்ட இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 350 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும். 6 Airbags மற்றும் Reverse Camera போன்ற அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Maruti Suzuki EVX

Maruti Suzuki தனது முதல் EV மொடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிடைக்கும் இந்த SUV மொடல், Auto Climate Control போன்ற மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
6 Airbags, ESC, Driver Assistance வசதி மற்றும் Auto Emergency Braking System கொண்ட இந்த காரின் விலை ரூ.22 லட்சம் முதல் ரூ.28 லட்சம் வரை இருக்கலாம்.
Tata Punch EV

Tata Motors புதிய Tata Punch EV காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் 10.25 Inch Touchscreen Display, 6 Airbags, 360 Degree Camera , Electronic Stability Control, Electronic Braking உள்ளன.
இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 421 கிலோமீட்டர் தூரம் செல்லும். இந்த கார் அதிகபட்சமாக ரூ.11 லட்சம் முதல் ரூ.15.5 லட்சம் வரை விலையில் கிடைக்கும்.
Tata Curvv

டாடா புதிய EV மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. EVகளின் வரம்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக புதிய Curvv EV மொடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது 30 kW முதல் 40.5 kW வரையிலான பேட்டரி திறன் கொண்ட இந்த மொடலை உருவாக்கியுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை பயணிக்கும் இந்த மொடல் ரூ.20-25 லட்சம் விலையில் கிடைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |