லட்ச கணக்கில் மாத சம்பளம் கிடைக்கும் முதல் 5 வேலைகள்: என்னென்ன தெரியுமா?
பொதுவாக, படிப்பையும் தாண்டி திறமையும், புதுமையான சிந்தனையும் இருந்தால் நிறைய சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்கிறது.
அந்தவகையில், இந்த காலகட்டத்தில் மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் முதல் 5 வேலைகள் குறித்து பார்க்கலாம்.
1. அனிமேஷன் மற்றும் கேம் டிசைன்
OTT, மொபைல் கேம்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி வேலைகள் செய்தால் நல்ல சம்பளம் கிடைக்கும்.
இந்த வேலைக்கு ஆரம்ப சம்பளம் வருடத்திற்கு 4-8 லட்சம் வரை கிடைக்கும். வேலையில் அனுபவம் கூடக் கூட வருடத்திற்கு 15 லட்சம் வரைக்கும் சம்பளம் கிடைக்கும்.
2. எதிக்கல் ஹேக்கிங் & சைபர் செக்யூரிட்டி
பொதுவாக அனைத்து நிறுவனங்களுக்கும் ஆன்லைன் டேட்டா, டிஜிட்டல் கணினி இரண்டையும் பாதுகாப்பாக வைத்துகொள்வது மிக முக்கியம்.
எதிக்கல் ஹேக்கர்ஸ் சட்டப்படி, தொழில்முறை ரீதியா கணினி பாதுகாப்பை சோதனை செய்வார்கள்.
இதற்கு ஆரம்ப சம்பளம் வருடத்திற்கு 8-10 லட்சம் கிடைக்கும். அனுபவம் கூடக் கூட வருடத்திற்கு 20-30 லட்சம் வரை கிடைக்கும்.
3. டிஜிட்டல் மார்க்கெட்டிங்
இக்காலகட்டத்தில் முக்கியமாக உள்ள சமூக ஊடகங்கள், மின் வணிகம், உள்ளடக்கங்களில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தெரிந்தவர்களுக்கு வேலை உள்ளது.
இந்த வேலைக்கு ஆரம்ப சம்பளம் வருடத்திற்கு 5-8 லட்சம் வரை கிடைக்கும். அனுபவம் கூடக் கூட வருடத்திற்கு 15-20 லட்சம் வரை கிடைக்கும்.
4. புராடக்ட் மேனேஜ்மென்ட்
வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கும், நிறுவங்களின் வணிகம் இலக்கிற்கும் இடையில் உள்ள பாலம் தான் இந்த புராடக்ட் மேனேஜர்.
இந்த வேலைக்கு ஆரம்ப சம்பளம் வருடத்திற்கு10-12 லட்சம் வரை கிடைக்கும். அனுபவம் கூடக் கூட வருடத்திற்கு 25-30 லட்சம் வரை கிடைக்கும்.
5. உணவு தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து
Nutritionist, Dietitian, Quality Control Expert போன்ற வேலைகளில் அதிக சம்பளம் வாங்கலாம்.
B.Sc. Food Tech/Nutrition/Dietetics படித்தால் ஆரம்ப சம்பளம் வருடத்திற்கு 4-6 லட்சம் வரை கிடைக்கும். பின் அனுபவம் கூடக் கூட வருடத்திற்கு 15 லட்சம் வரை கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |