இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் முதல் 5 நடிகர்கள்.., அவர்களின் சொத்துமதிப்பு எவ்வளவு?
பொதுவாக ஒவ்வொரு படத்திற்கு பிறகும் நடிகை, நடிகர்களின் சம்பளம் அதிகமாகுவது வழக்கம்.
அந்தவகையில் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் முதல் 5 நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.
1. அல்லு அர்ஜூன்
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் உள்ளார். இவரது சொத்துமதிப்பு சுமார் ரூ. 350 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான புஷ்பா: தி ரூல் இரண்டாம் பாகம் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தது.
அல்லு அர்ஜுன் இந்த படத்திற்காக ரூ.300 கோடி சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியானது.
2. விஜய்
1984ஆம் ஆண்டு வெளியான வெற்றி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தைத் விஜய் தொடங்கினார்.
விஜய் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். இவர் ஒரு படத்திற்கு ரூ.130 கோடி முதல் ரூ. 275 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
நடிகர் விஜய்க்கு ரூ.474 கோடி சொத்துமதிப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
3. ஷாருக்கான்
இந்தியாவின் பணக்கார நடிகர்களுள் ஒருவரான ஷாருக்கானின் சொத்துமதிப்பு ரூ.6,300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில், இவர் நடிப்பில் வெளியான ஜவான் மற்றும் பதான் ஆகிய சாதனைப் படங்கள் உலகளவில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூலித்தது.
இவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ.150 முதல் ரூ.250 கோடி சம்பளமாக வாங்கிக்குறார் என்று சொல்லப்படுகிறது.
4. ரஜினி காந்த்
தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராகக் கருதப்படும் ரஜினிகாந்தின் சொத்துமதிப்பு சுமார் ரூ.430 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிக சம்பளம் வாங்கும் நடிகரான ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு ரூ.125 கோடி முதல் ரூ.270 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
5. ஆமிர் கான்
திரைப்படத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஆமிர் கான் ரூ.1,862 கோடி சொத்துமதிப்பு கொண்டுள்ளார்.
நடிகர் அமீர் கான் ஒரு படத்திற்கு ரூ.100 கோடி முதல் ரூ.275 கோடி வரை அதிக சம்பளம் பெறுகிறார்.
இவரின் வரவிருக்கும் படமான சிதாரே ஜமீன் பர் மூலம் மீண்டும் திரையரங்குகளுக்கு வரவுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |