2025-ல் பரபரப்பை ஏற்படுத்தும் 5 சிறந்த Meme Coins
2025-ல் கிரிப்டோ சந்தையில் மீம் நாணயங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சமூக ஊடகங்கள், பிரபலங்களின் ஆதரவு மற்றும் ரசிகர்களின் உற்சாகம் ஆகியவை இவற்றின் மதிப்பை நிர்ணயிக்கின்றன.
இவை பெரும்பாலும் பயன்பாட்டை விட பரபரப்பை மையமாகக் கொண்டவை.
1- Dogecoin (DOGE)
2013-ல் அறிமுகமான Dogecoin, Shiba Inu நாயின் மீம் அடிப்படையில் உருவானது. இது Proof-of-Work முறைமையை பயன்படுத்துகிறது. 2021-ல் Elon Musk போன்ற பிரபலங்கள் ஆதரவு அளித்ததால் மதிப்பு உயர்ந்தது.
2- Shiba Inu (SHIB)
2020-ல் Ethereum பிளாக்செயின் அடிப்படையில் உருவான SHIB, Proof-of-Stake முறைமையை பின்பற்றுகிறது. “Ryoshi” என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த நாணயம், சமூக அடிப்படையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

3- Pepe Coin (PEPE)
“Pepe the Frog” மீமில் இருந்து உருவான PEPE, 420.68 டிரில்லியன் நாணயங்கள் கொண்டது. 90 சதவீதம் நாணயங்கள் liquidity pool-ல் பூட்டப்பட்டுள்ளன. இது சமீபத்தில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
4- Floki (FLOKI)
Elon Musk-ன் நாயின் பெயரில் உருவான FLOKI, “Floki Vikings” என்ற சமூகத்தை உருவாக்கியுள்ளது. “Valhalla” என்ற metaverse கேம் மற்றும் “FlokiFi” என்ற DEX வசதிகள் இதில் உள்ளன.
5- Bonk (BONK)
Solana பிளாக்செயினில் உருவான BONK, 2022-ல் அறிமுகமானது. இது Solana DEX-களில் liquidity-ஐ மீட்டெடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
மீம் நாணயங்கள், கிரிப்டோ உலகின் சுறுசுறுப்பான பகுதியாகத் திகழ்கின்றன. ஆனால், அதே நேரத்தில், அவற்றின் ஏற்ற இரக்கம் முதலீட்டாளர்களுக்கு சவாலாகவும் இருக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
meme coins 2025, best meme cryptocurrencies, Dogecoin vs Shiba Inu, Floki crypto news, PEPE coin prediction, BONK Solana meme coin, top meme tokens 2025, crypto investment trends, Ethereum meme coins, viral crypto coins 2025