ராம் சரண் முதல் ரஜினிகாந்த் வரை: தென்னிந்தியாவின் 5 பணக்கார நடிகர்கள்
இந்திய சினிமா என்பது பாலிவுட்டால் மட்டுமே வரையறுக்கப்படவில்லை என்பதை நிரூபித்து, குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
'KGF 2,' 'RRR,'மற்றும் 'பாகுபலி' போன்ற திரைப்படங்கள் உலகளாவிய அளவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
படம் வெற்றியடையும் போது, அதன் நடிகர்களின் நட்சத்திர அந்தஸ்தும், வருவாயும் அதிகரிக்கும். அந்தவகையில் தென்னிந்தியாவின் முதல் 5 பணக்கார நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
நாகார்ஜுனா
அக்கினேனி நாகார்ஜுனா நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை நடித்து, திரையுயலகில் அனுபவமிக்க நடிகரான இவர்.
பல ஆண்டுகளாக தென்னிந்தியத் திரையுலகில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார். அவரது நடிப்புத் திறனைத் தவிர, பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.
அவரது நீடித்த வெற்றியின் மூலம் 3010 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை சேகரித்துள்ளார்.
ராம் சரண்
மெகா பவர் ஸ்டார் ராம் சரணின் திரைப்படமான RRR மூலம் பெரிய ஒரு வெற்றியை பெற்றா். மேலும் அவர் ஆஸ்கார் விருதுகளில் தோன்றியதன் மூலம் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றார்.
பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கியதற்காக அறியப்பட்ட ராம் சரண், தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பானது ரூ.1370 கோடி ஆகும்.
கமல்ஹாசன்
பல்துறை நடிகரான கமல்ஹாசன், தென்னிந்தியாவின் பல்வேறு மொழிகளில் தனது நடிப்புத் திறனை வௌிக்காட்டியுள்ளார்.
நடிப்பில் மட்டும் நின்றுவிடாமல், தனது வாழ்க்கையில் ஏராளமான படங்களை இயக்கி தயாரித்துள்ளார். இவரது சொத்து மதிப்பானது 450 கோடி ரூபாய் ஆகும்.
விஜய்
ஒவ்வொரு படத்திற்கும் கணிசமான சம்பளம் கேட்கும் தளபதி விஜய், தென்னிந்திய திரையுலகில் முன்னணியில் இருக்கும் ஒரு நடிகராவார்.
அவரது நடிப்பு வாழ்க்கையைத் தாண்டி, அவர் அரசியலிலும் இறங்கியுள்ளார். தளபதி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு 445 கோடிகளை எட்டுகிறது.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் பெரும் புகழையும், ஏராளமான ரசிகர்களையும் பெற்ற ஒரே நடிகராக ரஜினிகாந்த் இருகிறார். திரையுலகிலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் ரஜினிகாந்தின் செல்வாக்கு அதிகம்.
அவர் தனது திரையில் நடிப்பிற்காக மட்டுமல்ல, அவரது பணிவு, மனிதாபிமானம் மற்றும் திரைக்கு வெளியே எளிமையான வாழ்க்கை முறைக்காகவும் பாராட்டப்படுகிறார்.
430 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், உண்மையான உலக சூப்பர் ஸ்டாராக இவர் இன்று வரையிலும் போற்றப்படுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |