பிரியங்கா சோப்ரா முதல் செரீனா வில்லியம்ஸ் வரை: உலகின் டாப் % ஆடம்பர திருமண ஆடைகள்
Top 5 Worlds Most Extravagant Bridal Gowns: திருமணங்கள் எப்போதும் அனைவரையும் உற்சாகப்படுத்தும் இணைப்பு விழா ஆகும். இங்கு திளைக்கும் உறவுகளும், பரிமாறப்படும் உணவுகளும், உடுத்தப்படும் புத்தாடைகளும் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது.
அந்த வகையில் நவீன காலத்தில் நடைபெற்ற திருமணங்களில் வியக்கத்தக்க கலைத்திறனும், பிரம்மாண்ட விலையும் கொண்ட 5 திருமண ஆடைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.
ஸ்பெயின் ராணி லெடிசியா திருமண உடை
ஸ்பெயினின் ராணி லெடிசியா(Queen Letizia) 2004ம் ஆண்டு அப்போதைய பட்டத்து இளவரசர் பெலிபேயை(Crown Prince Felipe) திருமணம் செய்த போது, ராணி லெடிசியா அணிந்திருந்த உடை இதில் முதலிடம் பிடிக்கிறது.

$8 மில்லியன்(சுமார் ரூ.75.6 கோடி) மதிப்புடைய இந்த திருமண ஆடை உண்மையான தங்க நூல்களால் நுணுக்கமாக நெய்யப்பட்டிருந்ததே இதன் தனிச் சிறப்பாகும்.
ஆடையில் இளவரசரின் சின்னம், ஃபுளூர் -டி-லிஸ்(fleur-de-lis) மற்றும் கோதுமை கதிர்கள் ஆகிய பாரம்பரிய வடிவங்கள் தையல் வேலைப்பாடுகளாக செய்யப்பட்டிருந்தது.
செரீனா வில்லியம்ஸ்
மகளிர் டென்னிஸ் உலகின் ஜாம்பவனாக கருதப்படும் செரீனா வில்லியம்ஸ் 2017ம் அலெக்ஸில் ஓஹானியனை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தில் தேவதையை போல் தோன்றிய செரீனா வில்லியம்ஸ், சாரா பர்டன் வடிவமைத்த $3.5 மில்லியன்(சுமார் ரூ. 33.1 கோடி) மதிப்புடைய திருமண ஆடையை அணிந்து இருந்தார்.
இந்த கவுனின் பெரிய பாவாடை மற்றும் கவர்ச்சிகரமான கேப் இடம்பெற்றிருந்தது.
பிரியங்கா சோப்ரா
2018ம் ஆண்டு பிரபல திரைபிரபலங்களான பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமண விழாவில் ராப் லாரன் வடிவமைத்த தனித்துவமான கவுனில் தோன்றிய பிரியங்கா சோப்ரா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
மும்பை சேர்ந்த 15 கைவினைஞர்கள் கிட்டத்தட்ட 1,826 மணி நேரம் உழைத்து உருவாக்கிய இந்த கவுனின் விலை $2 மில்லியன்(சுமார் ரூ.18.9 கோடி) ஆகும்.
இரண்டாம் எலிசபெத் ராணி
அப்போதைய இளவரசி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப்பை திருமணம் செய்த போது $1.6 மில்லியன்(சுமார் ரூ. 15.1 கோடி) மதிப்பு கொண்ட ஜவரி நிற டுசெஸ் சாட்டின் கவுனை அணிந்து அனைவரையும் ஈர்த்தார்.
விக்டோரியா ஸ்வரோஸ்கி
விக்டோரியா ஸ்வரோஸ்கி 2017ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற அவரது திருமணத்தின் போது $1 மில்லியன்(சுமார் ரூ.9.45 கோடி) மதிப்புடைய ஆடையுடன் தோன்றினார்.
மைக்கேல் சிங்கோ வடிவமைத்த இந்த ஆடையில் 500000 ஸ்வரோஸ்கி படிகங்கள் பதிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த ஆடையில் 26 அடி நீளம் கொண்ட லேஸ் விளிம்பு முக்காடு இணைக்கப்பட்டிருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |