தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான்
உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தங்களிடம் உள்ள தங்க கையிருப்பு மூலமாக தங்களின் நீண்டகால ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகின்றன.
இந்த வரிசையில் தற்போது இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் தங்களுடைய நிலைத்தன்மையை வலுப்படுத்த வேக வேகமாக தங்க கையிருப்பை அதிகரித்து வருகின்றன.
இது உலக அரங்கில் செல்வாக்கை வெளிப்படுத்த நாடுகள் மேற்கொள்ளும் மூலோபாய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 நாடுகள்
அமெரிக்கா
உலக நாடுகளின் தலைவராக தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளும் அமெரிக்காவிடம் சுமார் 8,133டன்கள் தங்கம் உள்ளது.
அமெரிக்காவின் நிதி அமைப்புகளுக்கு இந்த தங்க கையிருப்பு தான் முதுகெலும்பாக உள்ளது.
இது தான் அமெரிக்க நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பலப்படுத்துகிறது.
ஜேர்மனி
அமெரிக்காவை தொடர்ந்து தங்க கையிருப்பில் ஜேர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜேர்மனியிடம் சுமார் 3,351 டன்கள் தங்க கொட்டிக்கிடக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியான காலகட்டத்தில் இந்த தங்க கையிருப்பு தான் கிரேக்கத்திற்கும், போர்ச்சுக்கலுக்கும் உதவியது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ்
மூன்றாவதாக பிரான்ஸிடம் 2,452 டன்கள் தங்கம் உள்ளது.
அமெரிக்க டொலர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) ஆதிக்கத்தை பிரான்ஸ் இந்த தங்கத்தின் மூலம் எதிர்கொள்கிறது.
மேலும் யூரோவின் மதிப்பை பாதுகாக்கவும், ஐரோப்பாவின் செல்வாக்கு குறையாமலும் இந்த தங்க கையிருப்பு பார்த்துக் கொள்கிறது.
இத்தாலி
இத்தாலியிடம் 2,451 டன்கள் தங்கம் உள்ளது.
இத்தாலி இந்த தங்கத்தை நிதி நெருக்கடி காலத்தில் மிகப்பெரிய கேடயமாக பயன்படுத்துகிறது.
ரஷ்யா
வளர்ந்த நாடுகளின் பட்டியலில் தனித்து நிற்கும் ரஷ்யாவிடம் 2,333 டன்கள் தங்கம் கையிருப்பில் உள்ளது.
உக்ரைன் போர் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை எதிர்த்து, ரூபிளின் மதிப்பை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க இந்த தங்கம் பயன்படுகிறது.
சீனா
உலகின் புதிய மாற்று சக்தியாக உருவெடுத்து வரும் சீனாவிடம் 2,292 டன்கள் தங்கம் கையிருப்பாக உள்ளது.
இது அமெரிக்க டொலரின் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க பயன்படுகிறது.
சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்திடம் 1040 டன்கள் தங்கம் உள்ளது, இதுவே உலகின் பிரபலமான சுவிஸ் வங்கியின் அடித்தளமாக உள்ளது.
இந்தியா
இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) தரவுகளின்படி, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக 880 டன்கள் தங்கம் உள்ளது.
ஆனால் தங்க நகைகள் மீது ஆர்வம் கொண்ட இந்தியர்களின் வீடுகளில் சுமார் 25,000 டன்கள் தங்கம் ஒளிந்து கிடக்கிறது.
இது இந்திய தேசியத்தின் மறைந்து கிடக்கும் மிகப்பெரிய தேசிய சக்தி மையமாக செயல்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |